ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1,400 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.வீட்டை விட்டு வெளியே சென்று உணவுபொருட்களைத் தேட முடியாத நிலை. தேடினாலும் கிடைக்காது. அல்லது உயிரே பறிபோனலும் வியப்படையை ஒன்றும் இல்லை என்பதே தற்போதைய காஷ்மீரின் நிலை.
உயிருக்கு பயந்து வீட்டை விட்டுவெளியே வர முடியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் திவான்சந்த் என்ற இந்து குடும்பமும் ஒன்று. திவான்சந்தின் வீட்டில் மூதாட்டி ஒருவரும் இருந்தார். உணவு பொருட்கள் இல்லாத நிலையில் திவான்சந்தும் அவரது மனைவியும் தவித்தனர்.
அப்போதுதான் திவான்சந்தின் மனைவிக்கு தனது நெருங்கிய தோழி சுபைதா பேகத்தின் நினைவு வந்தது. சுபைதா பேகத்தை தொலைபேசியில் அழைத்த திவான்சந்த்தின் மனைவி , ''தனது கஷ்ட நிலையை எடுத்துக் கூறி, வீட்டில் தனது பாட்டி கூட உணவில்லாமல் அவதிப்பட்டு வருவதாக ''சுபைதாவிடம் தெரிவித்தார்.
இத்தனைக்கும் சுபைதா பேகத்தின் வீட்டிலும் போதிய உணவு பொருட்கள் இல்லை. ஆனாலும், ஒரு வினாடி கூட அவர் யோசிக்கவில்லை. அடுத்த நிமிடம் தனது கணவரிடம் திவான்சந்த் குடும்பத்தின் நிலையை எடுத்துக் கூறினார். கணவரும் மனைவியும் கையில் கிடைத்த உணவு பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டனர்.
வாகனத்திலும் போக முடியாது. திவான்சந்தின் வீடோ, ஸ்ரீநகரில் ஜீலம் நதிக்கு அக்கரையில் ஜவஹர் நகர் என்ற பகுதியில் இருந்தது.

எனினும் தம்பதியர் தயங்கவில்லை. தங்களது உயிரை பற்றி கவலைக் கொள்ளவில்லை. சுபைதா பேகத்தின் நோக்கம் தனது தோழியின் துயரை துடைப்பதாக மட்டுமே இருந்தது. கணவரை, உணவு மூட்டையை தோளில் எடுத்துக் கொள்ள சொன்னார். தொடர்ந்து தம்பதியர் தியான் சந்தின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
ஸ்ரீநகரின் வெறிச்சோடிய சாலைகள் இன்னும் பயமுறுத்தின. வன்முறை ஆட்டம் கண்டத் தெருக்களை கவனமாக கடந்தனர். இப்படி பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தே தியான்சந்தின் வீட்டை அடைந்தனர். பின்னர் அவர்களிடம் உணவுப் பொருட்களை வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினர்.
''எனது தோழி காலையில் என்னை போனில் அழைத்து நிலைமையை சொன்னாள். அவர்கள் வீட்டில் வயதான மூதாட்டியும் இருந்தார். அந்த சமயத்தில் என்னால் வேறு எதையும் பற்றி யோசிக்க முடியவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்ற நேரம் மட்டுமே ''திக் திக்'' என்று இருந்தது என்றார்.
திவான்சந்தோ, ''காஷ்மீரில் எத்தனையோ மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களைப் போன்றவர்கள் இவர்களை போன்ற நண்பர்களை பெற்றிருப்பதை பாக்கியமாகக் கருதுகிறோம் ''என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
காஷ்மீரில் துப்பாக்கி சத்தமும் ஓயவில்லை... மனித நேயமும் மாறவில்லை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.