Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

குரங்குகள் பயன்படுத்திய கல் சுத்தி - பிரேசிலில் கண்டுபிடிப்பு


பிரேசிலில், குரங்குகளால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பழங்கால கல் கருவிகள் இருந்ததற்கான ஆதாரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குரங்குகள் கொட்டையை உடைக்கப் பயன்படுத்திய கற்களை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்துள்ளனர். இவை சுமார் 700 ஆண்டுகள் பழையனவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தக் கல் சுத்திகள் போன்ற ஆயுதங்கள் மீது , பல நூற்றாண்டு கால முந்திரிப்பருப்பு எண்ணெய்க் கறை படிந்திருந்தது. இவை இப்போதும் கப்புச்சின் இனக் குரங்குகள் வசிக்கும் பகுதியில் மரங்களின் கீழ் பூமியில் புதையுண்டு கிடந்தன.

மனிதக் குரங்குகள் முதல் காக்கைகள் வரை, மனிதரல்லாத வேறு பல ஜீவராசிகள் கருவிகளைப் பயன்படுத்தியதைக் காட்டும் மிகச் சமீபத்திய ஆதாரம் இந்தக் ஆண்டுபிடிப்பாகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.