வசந்தன்... ஐஏஎஸ் ஆக வேண்டும் என லட்சியத்தை மனதில் வைத்திருந்த இளைஞர். அதற்காக ஒவ்வொரு நாளும் உழைப்பை செலுத்திக் கொண்டிருந்தார். அவருடைய ஐஏஎஸ் படிப்புக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என அவரது அம்மா சுதா உலக ஒளி டெல்லியிலுள்ள வங்கிக்கு மாற்றல் வாங்கினார்.
வசந்தனின் அப்பா உலக ஒளியும் மகனுக்காகவே தொலைபேசி துறையில் டெல்லிக்கு மாற்றம் பெற்றார். சென்னையில் இருந்த வீட்டையும் ஏறக்குறைய காலி செய்துவிட்டார்கள். இறுதியாக வசந்தன் மட்டும் டெல்லிக்கு செல்ல வேண்டியிருந்த போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை கடக்கும் போது விபத்தில் மாட்டி இறந்துவிட்டார் இந்த இளைஞர்...
ஒரே மகன் வசந்தனின் கனவுகள் எல்லாம் ஒரே நொடியில் கரைந்து போனதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்தனர். மகனை இழந்த மீள முடியாத சோகத்திலிருந்து இயல்புநிலைக்கு வரவே பல மாதங்கள் ஆனது. மறைந்த வசந்தனின் கனவுகளில் ஒன்று இலவச நூலகம் அமைத்து சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பது. அதையே அம்மா சுதா இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார். வசந்தன் பெயரில் கோடம்பாக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த நூலகம் இன்று பல மாணவர்களுக்குப் பயன்படுகிறது.
வசந்தன் நூலகத்தின் முதல் ஆண்டு நிறைவு விழாவுக்கு டெல்லியில் இருந்து வந்திருந்த வசந்தனின் அம்மா சுதா உலக ஒளி நம்மிடம் பேசினார்... வசந்தன் நிறைய புத்தகங்கள் படிப்பவன். பிறருக்கு உதவ வேண்டும் என்பது அவனது இயல்பிலே இருந்தது. சமூக விஷயங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் அவனுக்கு. ஐஏஎஸ் ஆகி நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் எம்.ஏ. முதுகலைப் பட்டத்தில் ‘அரசியல் அறிவியல்’ படித்தான்.
தமிழ் இலக்கியங்கள் மீதும் அவனுக்கு தீராக்காதல். உலக திரைப்படங்கள் திரையிடுவதற்காகவே ஒரு சிறிய திரையரங்கம் கட்ட வேண்டும் என்பதும் அவனது ஆசை. கட்டாயம் செய்வோம் என்பேன் நான். திறமை இருந்தும் பணம் இல்லாதவர்களுக்காக விளையாட்டு அகாடமி ஆரம்பிக்கவும் அவனுக்கு எண்ணம் இருந்தது. நல்ல படைப்பாற்றலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற குணமும் அவனுடன் இருந்தது கண்டு பெருமைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வு களுக்கு தகுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தகங்கள் விலை அதிகமானவை. வசதி குறைவானவர்களால் வாங்கிப் படிக்க முடியாது. அவர்கள் நூலகங்களை நம்பித்தான் இன்னமும் இருக்கிறார்கள். அப்படி வசதி குறைவான பிள்ளைகளுக்கு அரசு தேர்வுகளுக்கு தகுதிப்படுத்திக் கொள்ள ஒரு இலவச நூலகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறான்.
இப்படி அவன் விரும்பி செய்ய எண்ணிய விஷயங்களை, அவனது எதிர்பாராத மறைவுக்குப் பின், அவன் நினைவாக, மற்றவர்களுக்கு உதவும் படி செய்ய நினைத்தோம். எங்களால் முதலில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தது இலவச நூலகம். எங்களிடம் இருந்த புத்தகங்களை வைத்து ஆரம்பித்தோம். பின்னர் தேவையான புத்தகங்களை விலைக்கு வாங்கி இந்த நூலகத்தை முழுமைப்படுத்தினோம். நானும் கணவரும் டெல்லியில் இருக்கிறோம். கோடம்பாக்கத்தில் எங்களது வீடு வெறுமனே பூட்டிக் கிடந்தது. ‘அதை வாடகைக்கு விட்டால் கடன்களை அடைக்க வசதியாக இருக்கும்’ என்று கூட நெருங்கிய சில நண்பர்கள் யோசனை சொன்னார்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை.
வசந்தன் நினைவாக எங்களிடம் இருக்கும் நூல்களை வைத்து ஒரு நூலகம் தொடங்குவதுதானே சரி யாக இருக்க முடியும்? ஆனால், நாங்கள் டெல்லியில் இருந்து கொண்டு இந்த விஷயங்களை எப்படி செய்வது என யோசித்து கொண்டிருந்தோம். அப்போது தான் சில முகநூல் நண்பர்கள் எங்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர். முக்கியமாக ரேகா சாமுவேல் பல வழிகளிலும் முன்னின்று உதவினார். பத்திரிகையாளர் எஸ்.எம்.பாலசுப்ரமணியமும் நூலகத்தின் உருவாக்கத்தின் போது நேரில் சென்று உதவிகளை செய்தார்.
இலக்கியம், சமூகவியல், பொது அறிவு, அரசு தேர்வுகளுக்கு தகுதிப்படுத்திக் கொள்ள என அனைத்து வகையான புத்தகங்களும் நூலகத்தில் கிடைக்கும். எந்தக் கட்டணமும் வாங்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். முழுக்க இலவசமாக, வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு பயன்பட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். இன்று பல கல்லூரிகளில் இருந்து வசந்தன் நூலகத்துக்கு வந்து படிப்பதை மிகுந்த சந்தோஷத்துடன் கவனித்து வருகிறேன். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் திறந்திருக்கும். வார இறுதிநாளில் உலகத் திரைப்படங்கள் திரையிடவும் திட்டமிட்டுள்ளோம்.
ஞாயிறு மட்டும் விடுமுறை. நூலகத்தை பராமரிப்பதற்காக இரண்டு நூலகர்களை நியமித்துள்ளோம். எனது ஒரே மகனை இழந்தாலும், நல்ல விஷயங்களுக்காக பாடுபடும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுடைய அனைத்துப் பிள்ளைகளையும் எனது பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்...’’ என நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் சுதா உலக ஒளி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.