Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

நான்கு வயதில் 12 வயதுக்குட்பட்டோர் அணியில் சேர்ந்த சிறுவன் !


ஒரு வயதில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த ஷ்யான், மூன்றே  வயதில் விக்கெட் முன்னர் நிற்க ஆரம்பித்து விட்டான்.  நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ இப்போது 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளி அணியில் இடமும் பிடித்துள்ளான். உண்மையில் கிரிக்கெட் பேட்டை தூக்கக் கூட முடியாத வயது.
ஆனால் அட்டகாசமான ஃபிரென்ட் புட் வைத்து பந்தை எதிர்கொள்கிறான். இந்த வயதில் இவ்வளவுத் திறமையா என  பார்ப்பவர்களால் வியப்படையத்தான் முடிகிறது. டெல்லியில் ஹம்ரத் பப்ளிக் பள்ளியில் படித்து வரும் ஷ்யானுக்கு, விராட் கோலிதான் ஆதர்ஷ நாயகன். ஏன் விராட்டை பிடிக்குமென்றால்,  'சதமாக அடித்து தள்ளுகிறார்' என்று மழலையில்  பதில் வருகிறது

ஷ்யானின் தந்தை ஹர்ஷத்தும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். தனது மகன் குறித்து அவர் கூறுகையில், " ஷ்யானுக்கு அபார கிரிக்கெட் அறிவு. நான் எதையுமே கற்றுத் தரவில்லை. இயற்கையாகவே அவனிடம் கிரிக்கெட் திறமை இருந்தது. அதனை நான் பட்டைத் தீட்டினேன் அவ்வளவுதான். எனது குடும்பம் மட்டுமல்ல, நண்பர்கள் கூட நான் ஷ்யானுக்காக நேரத்தை வீணடிப்பதாக கூறினர். ஆனால் கடவுள் அபார கிரிக்கெட் திறமையோடு  என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவனது திறமையை வீணடித்து குழந்தைக்கு  துரோகமிழைக்க விரும்பவில்லை. கடவுள் அவனுக்கு நல்வழி காட்டுவார்" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.