மணிப்பூரை சேர்ந்தவர் மோனிகா கென்ஜெம்பம். டெல்லியில் உள்ள ஒரு கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு தென்கொரியா செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அவரது பாஸ்போர்ட்டைபரிசோதித்த குடியேற்றப் பிரிவு அதிகாரி ஒருவர், 'உங்களைப் பார்த்தால் இந்தியர் போலத் தெரியவில்லையே' என கிண்டலாக கூறியுள்ளார். 'இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன ' என்ற கேள்வி வேறு அடுத்து கேட்கப்பட்டுள்ளது. குடியேற்றத்துறை அதிகாரியிடம் இருந்து இப்படியெல்லாம் கேள்வி வரும் என சற்றும் எதிர்பார்த்திராத மோனிகா, இதனால் கடும் அதிர்ச்சியடைந்ததார். இனரீதியான தன்னை அவர் அவமதிப்பதை உணர்ந்து கொண்ட மோனிகா , இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்
அதில் அவர் எழுதியிருப்பதாவது , 'அந்த குடியேற்றப் பிரிவு அதிகாரி நீங்கள் ஒரு பக்கா இந்தியரா என கேலியுடன் என்னை பார்த்து கேட்டார். நான் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தேன். 'இந்தியர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் எனத் தெரியுமா... இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன' என அடுத்த கேள்வி. அருகாமையில் இருந்த கவுன்டரில் இருந்த பெண் என்னை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தார். 'ஏற்கனவே நான் லேட். சீக்கிரம் பார்மாலிடிஸ் முடிச்சு கொடுங்க' என்றேன்
அவர் 'நஹி நஹி போலோ போலோ' என்றவாறு சொந்த மாநிலம் எது என்றார் . ' வேறு வழியில்லாமல் மணிப்பூர்' என்றேன். 'மணீப்பூரை சுற்றி எத்தனை மாநிலங்கள் உள்ளன' என இப்போது அடுத்த கேள்வி. நான் பதில் அளிக்கவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் என்னை பதில் கூறுமாறு வற்புறுத்தினார். 'மீண்டும் லேட்டாகி விட்டது' என்றேன். இப்போது, நீங்கள் இல்லாமல் ஏர்கிராஃப்ட் பறக்காது என்றார் நக்கலாக. உண்மையில் நான் இந்தியரா என்ற அவரது சந்தேகத்தை விட என்னை கேலி செய்ய வேண்டுமென்பதே அவரது நோக்கமாக இருந்தது'' என தனது வேதனையைப் பகிர்ந்திருந்தார்.
மோனிகாவின் இந்த பதிவு, சமூகவலை தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோனிகாவுக்கு ஆதரவாக அந்த அதிகாரியை நடத்தையை ஆயிரக்கணக்கானோர் கண்டித்திருந்தனர். ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் , விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரி ஒருவரே மணிப்பூர் பெண்ணிடம் இனரீதியான கேள்விகள் எழுப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா,'சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளார். தற்போது தென்கொரியா சென்றுள்ள மோனிகா நாடு திரும்பியதும் போலீசில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.