Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

திருவான்மியூரில் குடிபோதையில் பெண் ஓட்டிய கார் மோதி தொழிலாளி பலி!


சென்னை தரமணி அருகே குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படும் பெண் ஓட்டிய கார் மோதி கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி. இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில்  இன்று அதிகாலை 4.30 மணி அளவில், தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றார். தரமணி அருகே ராஜீவ் காந்தி சாலையை முனுசாமி கடக்க முயன்றபோது ஒரு சொகுசு கார் வேகமாக வந்து அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் முனுசாமி சுமார் 15 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு  விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் கதறி அழவும், அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். உடனே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் இருந்த பெண்களையும் வெளியே இழுத்து வந்தனர்.

அவர்கள் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து அப்பெண்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா (26), சோனிஜென் சுஷ்மா (31) என்பதும், இவர்கள் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட ஐஸ்வர்யா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள்  நீதிமன்ற காவலில் வைத்து சைதாப்பேட்டை 18 வது பெருநகர குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் உத்தரவிட்டது.    

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.