திருவாரூரில் உள்ள குளக்கரையின் அருகில் ஒரு ஏழைக் குடியானவன் குடிசை போட்டுக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களின் தாய் இறந்த கொஞ்ச காலத்திற்குப் பின் தந்தையும் இறந்து போனார்.
மூத்த மகன், ""இந்தக் குடிசை என்னுடையது,'' என்றான்.
இரண்டாவது மகன், ""இதிலுள்ள சாமான்கள் எல்லாம் என்னுடையது,'' என்றான்.
மூன்றாவது மகனுக்கு எதுவுமே இல்லை. அவனும், ""சரி. எனக்கு அதோ அந்த மூலையில் கிடக்கும் கயிற்று சுருளை கொடுங்கள்,'' என்றான்.
இரு சகோதரர்களும், ""ஆகா! தாராளமாக எடுத்துக் கொண்டு போ,'' என்றனர்.
அவனும் அதனைத் தன் தோளின் மீது போட்டுக் கொண்டு கிளம்பி விட்டான்.
அவன் குளக்கரை மீது நடந்து, சற்று தூரம் போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, இனி என்ன செய்வது என்று யோசிக்கலானான்.
அப்போது சற்று தூரத்தில் அவன் ஒரு அணிலைப் பார்த்தான். அவன் தன்னிடமிருந்த கயிற்றால் சுருக்கு முடிபோட்டு, அணில் மீது எறிந்து இழுத்து அதனைப் பிடித்தான். இந்த மாதிரி பிராணிகளைப் பிடித்து, அவற்றின் தோலை உரித்து விற்றுப் பிழைக்கலாம் என்று எண்ணினான்.
ஆனால், அணிலைப் பிடித்ததும் அதனைக் கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. எனவே, ஒரு மரக்கூண்டை செய்து அதில் அணிலை அடைத்து எடுத்துக் கொண்டான். இதைப் போல ஒரு முயலையும் பிடித்து வைத்துக் கொண்டான். பிறகு தன் கயிறு சுருளை வலை போலப் பின்னினான். அப்போது சற்று தூரத்தில் ஒரு கரடி மலைப் பக்கம் போவதைப் பார்த்தான். அது ஒரு குகைக்குள் நுழைந்ததைக் கண்டு அவன், ""நல்லவேளை இங்கு வரவில்லையே,'' என மகிழ்ந்தான்.
அப்போது அந்த குளத்தில், "குபுக் குபுக்' கென்று ஏதோ சத்தம் வரவே, அவன் என்ன வென்று பார்க்கலானான். நீரிலிருந்து ஒரு சிறுவன் வெளிவந்து ஒரு கல்லை வைத்துக் கொண்டு, தன்னையே பார்ப்பதைக் குடியானவனின் மகன் கண்டான்.
அக்குளத்தின் அடியில் ஒரு ராட்சஸன் இருந்தான். அவன் குளத்திலிருந்து வெளியே வந்ததே இல்லை. ஆனால், யாராவது அக்குளக்கரைக்கு வந்தால், அவர்களைத் தந்திரமாகக் குளத்துக்குள் இறங்கி வரச் செய்து, அவர்களை இழுத்துக் கொண்டு போய் விடுவான். இந்த மாதிரிப் பல மனிதர்களை அவன் இழுத்துக் கொன்று, தின்று வந்தான். அவர்களது பணத்தை எல்லாம் ஒரிடத்தில் சேர்த்தும் வந்தான். இது பற்றிக் குடியானவனின் மகன் முன்பே, கேள்விப்பட்டிருந்தான். இப்போது நீர் மட்டத்திற்கு மேல் வந்தவன் அந்த ராட்சஸனின் மகனாக இருக்க வேண்டும் என அவன் எண்ணினான்.
அந்தச் சிறுவனும், ""என் குளத்திற்கு வந்து என்ன செய்கிறாய்?'' என்று கேட்டான்.
குடியானவனும், ""இதோ பார். வலை பின்னிக் கொண்டிருக்கிறேன். இந்த வலையை வீசி இந்தக் குளத்தையே பிடித்து எடுத்துக் கொண்டு போகப் போகிறேன்,'' என்றான்.
அதைக் கேட்ட சிறுவன் சட்டென மூழ்கி குளத்தின் அடியில் போய் ராட்சஸனிடம் குடியானவனின் மகன் கூறியதைச் சொன்னான்.
ராட்சஸனும், ""அப்படியா! நீ போய் அவனை மரம் ஏறும் போட்டிக்கு அழை. அவன் மரம் ஏறிக் களைத்துப் போகும் போது, குளத்தில் தள்ளி விடு,'' என்றான்.
சிறுவனும் நீர் மட்டத்திற்கு வந்து குடியானவனின் மகனிடம் தன்னோடு மரம் ஏறும் போட்டிக்கு, போட்டியாக வரச் சொன்னான்.
குடியானவளின் மகனோ, ""நான் வலை பின்னிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு பதிலாக உன்னோடு போட்டி போட என் தம்பியை அனுப்புகிறேன்,'' என்று கூறி மரக்கூண்டிலிருந்த அணிலை வெளியே விட்டான். அது வேகமாக ஓடி மரத்தின் மீது ஏறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்தது.
ராட்சஸனின் பையனால் அணிலோடு போட்டி போட முடியவில்லை.
அவன் தோற்றதால், மறுபடியும் போய் ராட்சஸனிடம் நடந்ததைச் சொன்னான்.
ராட்சஸனும், ""சரி. இம்முறை ஓட்டப்பந்தயம் வை. அவன் குளக்கரையைச் சுற்றி ஓடும்போது குளத்தில் தள்ளிவிடு,'' என்றான்.
சிறுவன் மறுபடியும் வந்து குடியானவனின் மகனிடம் ஒட்டபந்தயத்திற்கு வரும்படிச் சொன்னான்.
அவனும் தன் தம்பி எனக் கூறி முயலை அனுப்பினான்.
சிறுவனால் ஓட முடியவில்லை. தோற்றுப் போனான்.
ராட்சஸனின் மகன் மறுபடியும் குளத்துக்குள் போய் தன் தந்தையிடம் நடந்ததைக் கூறவே அவனும், ""சரி இம்முறை மல்யுத்தப் போட்டி போட்டு அவனைக் குளத்துக்குள் தள்ளிவிடு,'' என்றான்.
சிறுவனும் குளக்கரைக்கு வந்து குடியானவனின் மகனிடம் மல்யுத்தப் போட்டிக்கு அழைத்தான்.
அவனோ, ""நான் இந்த வலையைப் பின்னி முடிக்க வேண்டும். அதோ தெரியும் குகையில் என் தாத்தா இருக்கிறார். எனக்கு பதில் அவர் உன்னுடன் குஸ்தி போடுவார் போ,'' எனக் கூறி அனுப்பினான்.
ராட்சஸனின் மகன் குகைக்குள் போனான். குகையிலிருந்த கரடி அவனைப் பிடித்துக் கீறி படுகாயப்படுத்தியது. அவனும் உயிர் தப்பி ஓடி வந்து குளத்தில் குதித்துத் தன் தந்தையிடம் நடந்ததைக் கூறினான்.
ராட்சஸனுக்கு பயம் ஏற்பட்டது. ஒருவேளை குளத்தையே வலை வீசிப் பிடித்து, கொண்டு போய் விட்டால், தன் கதி என்ன என்று அவன் யோசித்தான்.
முடிவில் குளத்தை குடியானவனின் மகன் எடுத்துப் போக விடக் கூடாது என நினைத்து அவன் தன் மகனிடம், ""நீ போய் எவ்வளவு தங்கம் கொடுத்தால் அவன் நம்மை விட்டு இங்கிருந்து போய் விடுவான் என்பதை கேள்,'' என்று கூறி அனுப்பினான்.
ராட்சஸனிடம் சிறுவனும் வந்து கேட்கவே அவனும், ""பத்து மூட்டை தங்கம் கொண்டு வா,'' என்றான்.
ராட்சஸனின் மகன் பத்து மூட்டைகள் நிறையத் தங்கம் கொண்டு வந்து கொடுத்தான். அவனும் அம்மூட்டைகளோடு தன் தந்தையின் வீட்டை அடைந்தான்.
அவனது இரு அண்ணன்களும் அவன் கொண்டு வந்த தங்கத்தைப் பார்த்து, ""இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டனர். அவனும், ""இந்த வலையால் இதைச் சம்பாதித்தேன்,'' என்றான்.
அவர்கள் இருவரும் அது மந்திர வலை என நினைத்து, "தம்பி! நீ இந்த வீட்டையும் இதிலுள்ள பொருள்களையும் எடுத்துக் கொண்டு, எங்களுக்கு அந்த வலையைக் கொடுத்து விடு,'' என்றனர்.
அவனும் வலையைக் கொடுத்து அவர்கள் இருவரையும் அனுப்பிய பிறகு அந்த வீட்டில் சுகமாக வாழ்ந்தான்.
வலையை எடுத்துக் கொண்டு குளத்திற்குப் போனவர்கள் திரும்பி வரவே இல்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.