மதுரையில் அரசு பஸ்சை மர்மநபர் ஒருவர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்திலிருந்து மதுரை நோக்கி வந்து அரசு பஸ், நள்ளிரவு 1 மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வந்தடைந்தது. காலை 5.30 மணிக்கு மீண்டும் ராஜபாளையம் செல்லவிருந்த பஸ்சை, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நிறுத்தி சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அதிகாலையில் வந்து பார்த்த போது பஸ், நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லை. இதனையடுத்து பஸ் நிலையம் முழுவதும் தேடியதில் பஸ் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட யாரேனும் பஸ்சை திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமான பஸ்சை தேடும் பணி மதுரை மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.