இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது மதுரை ஆதினத்தின் மீது குற்றச்சாட்டுகள் கிளம்புவது வழக்கம். அந்தச் சந்தர்ப்பங்களில் அவற்றை ஆதினம் சட்டை செய்வதில்லை. 'இதுவும் கடந்துபோகும்...' என அமைதிகாத்து, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.
தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சர்ச்சை வளைத்தில் சிக்கியிருக்கிறார் மதுரை ஆதினம். கடந்த 2 ம் தேதி சென்னையில், அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற இந்த நிகழ்வில், மதுரை ஆதினமும் பங்கேற்றார். மேலும் இஸ்லாமிய கோட்பாட்டின்படி வழங்கப்படும் நோன்பு கஞ்சியையும் அருந்தினார் மதுரை ஆதினம்.

இதுதான் இப்போது இந்து மத அமைப்புகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மடத்தின் ஆதினமாக இருக்கும் அவர், மற்றொரு மதம் தொடர்பான சடங்கில் பங்கேற்று கஞ்சி அருந்திய செயல், இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என இந்து மத அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இதன் வெளிப்பாடாக இந்து மக்கள் கட்சியினர், மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்காக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், அமாவாசை தினமான இன்று காலை, மதுரை ஆதினத்தின் படத்தை வைத்து ‘சங்கு சங்கல்ப பூஜை’ செய்து, ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில், மாநில பொதுச்செயலாளர் ராம.ராம்குமார் இந்த நீக்க பூஜையை நடத்தியுள்ளார். மேலும் இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிராகச் தொடர்ந்து செயல்பட்டு வரும் மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் உள்ள அனைத்து ஆதினங்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.