Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

விரல் சூப்பும், நகம் கடிக்கும் குழந்தைகளா? கவலை வேண்டாம்


விரல் சூப்பும், நகம் கடிக்கும் குழந்தைகள் பொதுவாக இந்த கெட்ட பழக்கங்களிற்காக அதிகம் பேச்சு வாங்குவதுண்டு.

ஆனாலும் புதிய ஆய்வுகள் இவை நன்மையான விடயங்கள் எனறே சொல்கின்றன.
அதாவது இவ்வாறான பழக்கவழக்கங்களை உடைய பிள்ளைகள் பொதுவான ஒவ்வாமை நோய்களான வீட்டு தூசி, பூச்சிகள், புல், பூனைகள், நாய்கள், குதிரைகள் மற்றும் வான்வழி பூஞ்சைகளால் உண்டாகும் ஒவ்வாமைக்கு இலகுவில் ஆளாக்கப்படுவதில்லை என சொல்கின்றனர்
இது தொடர்பான ஆய்வு முடிவுகள் Pediatrics today எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இது போன்ற அழுக்குகளுக்கு குழந்தைகள் ஆரம்பத்திலேயே வெளிக்காட்டப்படுவதால் பிற்காலத்தில் இது போன்ற ஒவ்வாமைகள் விருத்தியடைவது தடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இவ் ஆய்வு நியூசிலாந்தில் 5, 7, 9, 11வயதுடைய 1000 சிறுவர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் ஒவ்வாமையானது 13 மற்றும் 32 வயது காலப்பகுதிகளில் மீண்டும் அளவிடப்பட்டது. இதன் படி 31 வீதமான சிறுவர்களுக்கு விரல் சூப்பும், நகம் கடிக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
13 வயதை எட்டுகையில் ஏதாவதொரு பழக்கவழக்கத்தை உடையவர்களில் 45 வீதமானவர்கள் மட்டுமே ஒவ்வாமையை கொண்டிருந்தனர்.
இரு பழக்கவழக்கங்களையும் கொண்டவர்களில் வெறும் 31 வீதமானவர்களே ஒவ்வாமை நோய்க்கு ஆளாகியிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.