ராணுவத்தின் வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள் 2018-ம் ஆண்டுக்குள் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் 32வது கூட்டத்தில் பேசுகையில், ''ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவும் உறுதியாக இருக்கின்றனர். இருப்பினும், இதில் வெளிநாட்டினரின் பங்களிப்பை ஏற்கமாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில், ராணுவத்தின் வசம் இருந்த 701 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. அதில், 201.3 ஏக்கர் நிலம், அதன் உரிமையாளர்களிடம் கடந்த 25-ம் தேதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் ராணுவத்தின் வசம் உள்ள நிலங்கள் யாவும் 2018-ம் ஆண்டுக்குள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதை ஒரே நாளில் செய்து விட முடியாது. இந்த நடவடிக்கைகள் யாவும் நியாயமான, நேர்மையான முறையில் நடக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை அரசின் நிர்வாகங்கள் தாமதப்படுத்துவதாக கூறுவது தவறு. அவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.