தங்களது வீடுகளில், தாமாக முன் வந்து கழிப்பறைகள் கட்டிய குடும்பங்களுக்கு கபாலி திரைப்படத்திற்கான இலவச டிக்கெட்டுகளை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வழங்கினார்.
புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றதில் இருந்தே, பிரதமரின் தூய்மை இந்தியாத் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிராமங்களில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலும், நகரப் பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்று கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
இந்நிலையில், கழிவறை கட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக, புதிய முயற்சியை கையில் எடுத்த மாவட்ட நிர்வாகத்தினர், மக்கள் தாமாகவே முன்வந்து ஜூலை 15-ம் தேதிக்குள் கழிவறை கட்டுவதை உறுதி செய்தால், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் டிக்கெட் அவர்கள் குடும்பத்துக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்த அறிவிப்புக்கு பின், புதுச்சேரியில் 107 வீடுகளிலும், காரைக்காலில் 40 வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கபட்டதாக ஊரக வளர்ச்சி துறை கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் கழிவறை கட்டிய குடும்பத்தினருக்கு, ஆளுநர் மாளிகையில் வைத்து , 'கபாலி' திரைப்பட டிக்கெட்டை இலவசமாக கிரண்பேடி வழங்கினார்.
அதன்பின் கிரண்பேடி இது பற்றி கூறும்போது, ''புதுச்சேரியில் தங்களது இல்லங்களில் தாமாக முன் வந்து கழிப்பிடங்கள் கட்டிய 147 குடும்பத்தினருக்கு இலவசமாக 'கபாலி' திரைப்படத்திற்கான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை, திரையரங்க உரிமையாளர்களே இலவசமாக தந்து பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.
புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் 477 வீடுகளில் இன்னும் கழிப்பறை கட்ட வேண்டியுள்ளது. ஆட்சியர் அங்கு முகாமிட்டு அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதை உறுதி செய்வார். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் செல்லிப்பட்டு கிராமம் கழிவறை வீடுகள் இல்லாத கிராமமாக அறிவிக்கப்படும்.
அதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடியிடம் உறுதி அளித்து உள்ளார்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.