Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

குழந்தை பருவத்தில் உடல் எடையை குறைப்பது சுலபம்


கொழுகொழு குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள் என்கிற எண்ணம் பலருக்கும் இன்றும் இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கொஞ்சி, செல்லப் பெயர்கள் வைத்து ஆராதிக்கிற பெற்றோர், குழந்தைகள் 10 வயதைக் கடக்கும்போது கலங்கிப் போகிறார்கள்.

உங்கள் குழந்தை...

* பம்பரம்  போல சுழன்று, துறுதுறுவென, சுறுசுறுப்பாக இல்லையா?

* சிறிய தூரத்தைக்கூட ஓட முடியாமல் அவதிப்படுகிறதா?

* நடந்து வரும் போது உருண்டு வருவது போல உள்ளதா?

* துள்ளி விளையாடி, குதிக்க முடியவில்லையா?

இதையெல்லாம் தினமும் கவனித்த பிறகாவது உங்கள் குழந்தை குண்டாகிக்கொண்டு  டைப் 2 நீரிழிவையும் ஒபிசிட்டி எனப்படுகிற பருமன் பிரச்சனையையும் ஏற்றுக் கொள்ளும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைப் பருவத்தில் உடல் எடையை குறைப்பது சற்று சுலபம். வயதான பிறகு அதிக எடையைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து, தினசரி வாழ்க்கையை ஒரு யுத்த களமாக ஆக்கிக்கொள்ளும் அநேக நண்பர்களை, குடும்பத்தினரை கண்கூடாகக் காண்கிறோம்.
ஆரம்பத்திலேயே (OBESITY) குண்டாவதை தடுத்து நிறுத்த ஒருசில நல்ல யோசனைகள் இதோ...

1. குழந்தைகளின் உடல் உழைப்புக்கு (Physical Activity) முக்கியத்துவம் அளியுங்கள். தினமும் சில மணி நேரமாவது அவர்கள் ஓடி, ஆடி விளையாடுகிறார்களா அல்லது ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனித்துக்கொண்டே இருங்கள்.

2. குடும்பத்துக்காகச் சமைக்கும்போது, குழந்தைகள் உடல்நலத்தை முதலில் மனதில் வைத்து அவர்களின் உடல் தேவை, சக்தியின் தேவை, வளர்ச்சியின் தேவை, உழைப்பின் தேவை, வயதின் தேவை என பாகுபடுத்தி, அதன்பின் சமைத்து, குழந்தைகளுக்கு பரிமாற வேண்டியது மிகமிக முக்கியமானதாகும்.

மேலே  கூறப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக (Over - eating) குழந்தைகள் சாப்பிடும்போது... எவ்வளவு ருசித்து குழந்தை சாப்பிடுகிறது என அன்பாய் பூரித்து, தினமும் அளவுக்கு அதிகமாக உணவு, இனிப்பு மற்றும் தின்பண்ட வகைகளைக் கொடுக்காமல் அளவோடு சாப்பிட கற்றுக் கொடுத்து, அவர்கள் அதை மீறும் சமயங்களில் கண்டிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

3. நல்ல சுவையான உணவு வகைகளை அதிகம் சமைத்து, அதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வேண்டி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சூடாக்கி சாப்பிடுவதை தயவு செய்து அறவே நிறுத்துங்கள். மேலும் தேவைக்கு அதிகமாக தின்பண்டங்கள் அல்லது நொறுக்குத் தீனி வகைகளை வீட்டில் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேமித்து வைப்பதை விட்டுவிடுங்கள்.  குழந்தைகளுக்கு சரிவிகித உணவின் (Balanced Diet) முக்கியத்துவத்தை அடிக்கடி விளக்கி, உண்மையை உணரச் செய்யுங்கள்.

4. குழந்தைகள் படிக்கும்போதோ, வீட்டு வேலைகள் செய்யும்போதோ, ஓடியாடி விளையாடி விட்டு அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு களைப்படையும் போதோ அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை. குழந்தைகளின் நல்ல ஓய்வுக்கு உற்ற நண்பன் ‘நல்ல தூக்கமே’. அப்படி ஓய்வு எடுத்து தூங்காத குழந்தைகள், தங்களின் வயிறை ஒரு குப்பைத் தொட்டியாக்கி பலதரப்பட்ட உணவு வகைகள், இனிப்புகள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகி விடுவார்கள்.

5. சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் டி.வி.  மற்றும் கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் செலவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அதன் திரையில் இருந்து வரும் நீல ஒளியின் (Blue light) தாக்கம் குழந்தைகளின் உடலுக்கு உகந்ததே அல்ல. அதை இந்த இளம் வயதில் அவர்களால் தாங்க முடியாது. இதனால் குழந்தைகளின் உடலுக்கு தீமையே உண்டாகும். இதன் மறுபக்கம் என்னவெனில் அதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பசி (Increase in appetite) எடுத்து, தேவைக்கு அதிகமான உணவு உட்செல்ல ஏதுவாகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.