Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2016

32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காதல் ஜோடி


32 ஆண்டுகளுக்கு பிறகு, தனது தாயின் காதலை நிறைவேற்றி கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மகிழ்ச்சி கண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஒசிராவைச் சேர்ந்த அனிதா செம்புவிலயில். இவரது தந்தை ராணுவத்தில் உதவி பொறியாளராக பணியாற்றினார். அனிதா கடந்த 1984ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டியூசன் ஆசிரியராக இருந்தவர் விக்ரமன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆவார்.

கட்சி தொடர்பான கூட்டங்களில் அனிதாவும், விக்ரமனும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் மணமகன் மிகவும் வயது முதியவராக இருந்த காரணத்தால், அனிதாவின் தந்தை திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்துவிட்டார். மேலும் குடும்ப சூழலை எடுத்துக் கூறி, வேறொரு இடத்தில் அனிதாவை திருமணம் செய்து வைத்தார்.

இதனால் மனமுடைந்த விக்ரமன், அந்த ஊரை விட்டே சென்று விட்டார். திருமண வாழ்க்கையில் அனிதாவிற்கு ஆதிரா என்ற பெண் பிறந்தார். அவளின் 8வது வயதில், குடிக்கு அடிமையாகி அவரது தந்தை உயிரிழந்தார். பின்னர் ஆதிராவையும், அவரது சகோதரியையும் வளர்க்கும் பொறுப்பில் அனிதா தீவிரமாக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது தாயின் காதல் கதையை அறிந்த ஆதிரா, மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.



இதற்கிடையில் விக்ரமன், அதே ஊருக்கு மீண்டும் திரும்ப வந்துள்ளார். அப்போது நடைபெற இருந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதனிடையே ஆதிரா, விக்ரமனை சந்தித்து, நடந்ததை கூறியுள்ளார். தனது தாயின் துயரமிகு வாழ்க்கையை எடுத்துக் கூறி, விக்ரமனை மறுவாழ்வு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தீவிர சிந்தனையை அடுத்து, ஆதிராவின் திருமணத்திற்கு பிறகே இதுகுறித்து யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார். தனது தாயின் மகிழ்ச்சியே பெரிது என்று எண்ணி, உடனடியாக திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் அனிதாவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி, விக்ரமனும், அனிதாவும் திருமணம் செய்து கொண்டனர். இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு காதல் ஜோடி மீண்டும் மண வாழ்க்கையில் சேர்ந்துள்ளது. தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும், தனது தாயின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயார் என்று ஆதிரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.