Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

வாட் வரி தெரியும்... அது என்ன ஃபேட் வரி?


கேரளாவில் மக்களை உடல் பருமனுக்குள்ளாக்கும் உணவு வகைகளான  பிட்சா, பர்கர் போன்றவற்றுக்கு ஃபேட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் பாரம்பரியமான உணவுகளை உண்ணும் கலாச்சாரம் கெண்டவர்கள்.  மூலிகை உணவுகளுக்கும் மூலிகை சிகிச்சைக்கும் பெயர்பெற்ற மாநிலம். ஆனால் மாறி வரும் உணவுக் கலாச்சாரத்தால், இளைஞர்கள்,இளைஞிகள்  பிட்ஷா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு அடிமையாகி விட்டனர்.கேரளாவில் மெக்டேனால்ட், பிட்சா  ஹப், பர்கர் கிங், டொமினோஸ், சப்வே பிராண்டுகளின் கீழ் 50 முதல் 60 பிட்சா மற்றும் பர்கர் ஷாப்கள்  உள்ளன.

கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் காரணமாக   ஏராளமானோர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். குழந்தைகள் இளம் வயதிலேயே பிட்சா, பர்கர் போன்ற உணவுகளுக்கு அடிமையாவதால், உடல் பருமனுடன் காணப்படுகின்றனர்.  இதனால் குழந்தைகளிடத்தில்   உடல் பருமன் ஆவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அல்லது பிட்சா, பர்கள் போன்ற உணவுகளை உண்பதை குறைக்கும்  வகையிலும் ஃபேட் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே ஃபேட் வரி விதித்த முதல் மாநிலம் கேரளாதான். இது குறித்து கேரள நிதித்துறை அமைச்சர் ஐசக் கூறுகையில் , ''இது போன்ற உணவு வகைகளுக்கு 14.5 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது''  என்றார்.  பிட்சா ஹப் மேலாண் இயக்குனர் உன்னத் வர்மா  ''இது வியாபாரிகளுக்கு எதிரான செயல்'' என  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந் 2011ம் ஆண்டு டென்மார்க்கில் முதன் முதலாக பிட்சா, பர்கர் போன்றவற்றிற்கு ஃபேட் வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஒரே ஆண்டில் இந்த வரி நீக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.