Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

கங்காரு ஸ்வீட் மதர் யு ஆர்!


மற்ற விலங்குகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு கங்காருவுக்கு உண்டு. அது பிறந்த தன் குட்டியை அதனுடனேயே வைத்திருக்கும். எப்படி என்று யோசிக்கிறீர்களா பட்டூஸ்!
இயற்கையாகவே கங்காருவின் உடல் அமைப்பில் ஒரு பை ஒன்று உள்ளது. அதன் பெயர் மதலைப்பை. அதனுள் தான் குட்டியை வைத்து கொள்ளும். கங்காருகள் பயந்த சுபாவம் கொண்டவை; குதித்தோடக் கூடியவை. இவற்றின் பின்புற கால்கள் 3 மீட்டர் உயரமுள்ள வேலிகளை தாண்டும். மணிக்கு 60 கி.மீ., வேகம் செல்லும் ஆற்றல் கொண்டவை. இவற்றில் 40 வகைள் உள்ளன. 33 நாட்களில் குட்டி போடும். ஒரு தடவையில் ஒரு குட்டி மட்டுமே வெளிவரும். பிறந்த ஒரு கங்காரு குட்டி 2.5 செ.மீ., நீளம் இருக்கும். கண்கள் மூடியவாறும், காதுகள் முழுமையாக வளராமலும், வாய் பார்ப்பதற்கு சிறிய ஓட்டை போன்றும் இருக்கும். முன்புற கால்கள் மட்டும் பாதம் மற்றும் நகத்துடன் வளர்ந்திருக்கும். குட்டி பிறந்தவுடனேயே, அவற்றின் பிறவி உள்ளுணர்வால் அதுவாகவே தாயின் மதலைப் பைக்குள் சென்று அமர்ந்து கொள்ளும்.
பின், கொஞ்சம், கொஞ்சமாக உரோமங்கள் வளரும்; கண்களை திறக்கும்; காதுகள் முழுமையாக வளரும். இதன் வளர்ச்சி முழுவதும் தாயின் மதலைப் பைக்குள்தான் நடைபெறும்.
சில மாதங்கள் சென்றபின், வெளி உலகிற்கு வரும். ஆனால், ஏதேனும் அபாயத்தை கண்டால், உடனே ஓடிச் சென்று தாயின் மதலைப் பைக்குள் அமர்ந்து கொள்ளும். ஆறு மாதத்தில் இருந்து அவற்றால் பையில் அமரமுடியாது. பைக்குள் இருந்தே குட்டி ஆரோக்கியமாக வளர்ந்து இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஆயத்தமாகும். தாயின் மதலைப் பைக்குள் இல்லாமல் அவற்றால் வாழவே முடியாது. மிருகங்களிலேயே குடும்ப பராமரிப்பை முறையாக செய்வது பெண் கங்காரு என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.