Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2016

இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்


இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு பொறியாளர்கள் முதல் கனரக வாகன ஓட்டுநர்கள் வரை விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத் தொடர்புத் துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு 2 ஆண்டு பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்ற கட்டிடப் பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். மாத ஊதியம் ரூ. 56 ஆயிரம்.

பிளஸ் 2 அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்ற பைபர் ஸ்பைலைசர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 28 ஆயிரத்து 800.

10-ம் வகுப்பு தேர்ச்சி, குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 19 ஆயிரத்து 500. இந்திய ஓட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களுக்கு மாத ஊதியம் ரூ. 16 ஆயிரத்து 750 வழங்கப்படும்.

10-ம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் தொலைத் தொடர்புத் துறையில் அனுபவம் பெற்ற லேபர்கள் தேவை. மாத ஊதியம் ரூ. 15 ஆயிரத்து 600.

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகள் பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றம் அனுபவத்துக்கு ஏற்ப்ட ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், உணவுப்படி, இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேரப் பணி ஊதியம் வழங்கப்படும். குவைத் நாட்டின் சட்டப்படி இதர சலுகைகளும் கிடைக்கும்.

30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு omcresum@gmail.com என்ற இமெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.