சென்னை: ஹரித்துவார் மேளாபவன் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகாண்ட் முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்
திருவள்ளுவர் புகழ் பாடி வரும் பா.ஜ.க., எம்.பி. தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக் கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள மதவாத அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் அளித்த பேட்டியில், " திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமைக்கப்படும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அந்த சிலை எங்கள் மக்களுக்கு ஊக்கமளிக்கும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த மொத்த பிரச்னையும் மரியாதைக்குரிய முறையில் தீர்க்கப்படும்.
திருவள்ளுவரின் சிலையை நிறுவுவதற்கு மரியாதையான, பொருத்தமான இடத்தை இறுதி செய்யும் படி ஃபர்துவா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திருவள்ளுவர் சிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாங்களும் அதை குறித்த அதே அளவு அக்கறை கொண்டுள்ளோம்" என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அனுப்பி உள்ள கடிதத்தில், ''ஹரித்துவாரில் தமிழ் ஞானி புலவர் திருவள்ளுவர் சிலை நிறுவுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையையும், தமிழ்நாட்டில் உருவான அமைதின்மையையும் நீங்கள் அறிந்ததே. இப்பிரச்னை குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.
உணர்ச்சிகரமான இப்பிரச்னையில் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை அறிந்து, இதற்கு உடனடியாக நல்ல தீர்வை எடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஹரித்துவாரில் உள்ள மேளாபவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காலம் தாழ்த்தாமல் நல்ல நடவடிக்கை மேற்கொண்ட தங்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்" என்று கூறி உள்ளார்.
இதே போல், திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட பா.ஜ.க. எம்.பி தருண் விஜய்க்கும் தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.