Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

1,000 மெகாவாட் மின்சாரம் விற்பனைக்கு தயார்: மோடி உதவக்கோரி ஜெ., கடிதம்


'மாநிலங்களுக்கு இடையே, மரபு சாரா எரிசக்தி மின்சாரத்தை கொண்டு செல்ல உதவும், பசுமை மின் வழித்தட திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு முன், தமிழகத்தில் இருந்து, 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங் களுக்கு கொண்டு செல்ல, தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்:

பசுமை அல்லது மரபு சாரா எரிசக்தி
உற்பத்தியில், நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் மொத்த காற்றாலை மின் நிறுவு திறன் அளவில், தமிழ கத்தின் பங்கு, 27 சதவீதம். இதுதவிர, 1,142 மெகாவாட் சூரிய ஒளிமின்சார உற்பத்தி திறனும் உள்ளது.

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், கூடுதலாக, 4,500 மெகாவாட் காற்றாலை மின்சாரம்; 5,000 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். தமிழகத்தில், தற்போது தென் மேற்கு பருவ மழை காலத்தில் அதிக அளவில், காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த சீசனின் போது, மற்ற மாநிலங்களுக்கு, 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசுவிற்பனை செய்ய முடியும். ஆனால், அதை அவர்களுக்கு தருவதற்கு, மாநிலங்களுக்கிடையே, பசுமை மின் வழித்தடத்தை உருவாக்குவது அவசியம். மத்திய மின்துறை அமைச்சகத்திடம் அதற்கான திட்டமும் கைவசம் உள்ளது.

அதை, உடனடியாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி, அந்த அமைச்சகத்தை தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இத்திட்டம் அமலாக சிறிது காலதாமதமாகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில், தமிழகத்தில் கிடைக்கும், 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தனி ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.