Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

செப்., மாதம் வெளிநாடு சுற்றலாம் : ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா திட்டம்


சென்னையில் இருந்து, செப்., மாதம், ஐரோப்பா, லண்டன், இலங்கை மற்றும் சீனாவுக்கு சிறப்பு சுற்றுலாவை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்கனவே, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கு, சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. செப்., மாதம், மூன்று விதமான ெவளிநாட்டு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.

ஐரோப்பா - லண்டன் : செப்., 21ல், புறப்படும் இந்த சுற்றுலா, 15 நாட்கள் கொண்டது. பிரான்ஸ்,
நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, வாடிகன் மற்றும் இத்தாலி நாடுகளை உள்ளடக்கியது. ஒருவருக்கு, 2.66 லட்சம் ரூபாய் கட்டணம்.

சீனா - ஹாங்காங்

செப்., 18ல் புறப்படும் இந்த சுற்றுலா, 11 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு, 1.52 லட்சம் ரூபாய் கட்டணம்.

இலங்கை

செப்., 10ல் புறப்படும் இந்த சுற்றுலா, ஏழு நாட்கள் கொண்டது. 'ராமாயணம் மற்றும் கதிர்காம யாத்திரை' என, பெயரிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு, 46 ஆயிரத்து, 400 ரூபாய் கட்டணம்.
'இந்த கட்டணம் விமான டிக்கெட், விசா, தங்கும் வசதி, வாகனம், உணவு மற்றும் நுழைவு கட்டணத்தை உள்ளடக்கியது. மேலும் விவரங்களுக்கு, 98409 02919 மற்றும் 90030 24169 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்; www.irctctourism.com என்ற இணைய தளத்திலும், தெரிந்து கொள்ளலாம்' என, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.