Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

மது போதையில் பணிக்கு வரும் விமானிகள்... பதறச் செய்யும் புள்ளிவிவரம்!


ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34  விமானிகள் பிடிபட்டுள்ளனர்.  அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும், சென்னையில் 10 பேரும், பெங்களூரில் 9 பேரும் பிடிபட்டுள்ளனர். பட்டியலிடப்பட்டுள்ள 16 விமான நிலையங்களில் மொத்தம் 122 பேர் சிக்கியுள்ளனர்.

2016 ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 23 விமானிகள் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர். இது  2015, 2014, 2013 ஆகிய ஆண்டுகளில் முறையே 43,30,26 என்ற அளவில் இருந்துள்ளது.

இதில் விமான நிறுவனங்கள் வாரியாக பட்டியலிட்டால் ஜெட் ஏர்வேஸ் 33, இன்டிகோ 25, ஸ்பைஸ்ஜெட் 20 மற்றும் ஏர் இந்தியா 19 என்ற‌ எண்ணிக்கையில் விமானிகள் குடித்துவிட்டு பணிக்கு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.




2014 ம் ஆண்டு வரை, இதற்கான தண்டனை என்பது முதல்முறை செய்த தவறுக்கு பிறகு 3 மாதங்கள் பணி இடைநீக்கமும், இரண்டாவது முறை தவறு செய்தால் 5 ஆண்டுகள் பணி இடைநீக்கமும் செய்யப்படும் என்ற விதி இருந்து வந்தது.

இது குறித்து மக்களவையில் பேசிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, "இரண்டாவது தவறுக்குப் பின் உள்ள தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்த 122 பேர்களில் 110 பேர் முதல் முறை மட்டுமே தவறிழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.