மனைவி பிரிந்து சென்ற வேதனையில் சிறைக்கு போக ஆசைப்பட்டு யாரோ ரோட்டில் நின்ற ஒருவரை கொலை செய்துள்ளார் ஒரு வாலிபர்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (45) ஒரு கூலித் தொழிலாளி. நேற்று இரவு அவர் கன்னடபாளையத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே காவலாளி ஒருவருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் வந்த வாலிபர் திடீரென ராஜீவிடம் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜீவின் தலை, மார்பில் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆனாலும் கொலையாளி எந்த சலனமும் இல்லாமல் ரத்தகறை படிந்த கத்தியுடன் தப்பி ஓடாமல் அங்கேயே நின்றார்
.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து கொலையாளியை பிடித்தனர். பிறகு, ராஜீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் விசாரணையில் பிடிபட்ட கொலையாளி அதே பகுதி காந்தி நகரை சேர்ந்த ஜான் (35) என்பது தெரிந்தது.
ஜான் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது, “ நான் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் எனக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் என்னை விட்டு மனைவி பிரிந்து சென்று விட்டார். அவரது வீட்டுக்கு சென்று தவறு செய்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்டும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் நான் மனவேதனை அடைந்தேன். மனைவி இல்லாமல் வீட்டில் இருப்பதை விட சிறையில் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். இது பற்றி நண்பர்கள் சிலரிடமும் அடிக்கடி கூறி வந்தேன். நேற்று இரவு குப்பை கிடங்கு அருகே மது அருந்தி விட்டு நடந்து சென்றேன். அப்போது ராஜீவ் நின்று கொண்டு இருந்தார். ஏற்கனவே மனவேதனையில் இருந்த நான் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். அவருக்கும் எனக்கும் எந்த மோதலும் கிடையாது. அவர் யார் என்றே எனக்கு தெரியாது.” என்றார்.
மனைவி பிரிந்து சென்றதால் ஜான் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.