Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த நாட்டு மருந்தை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்!


இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தால் மக்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதோடு, நோய்க்கிருமிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருவரது உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தி வலிமையுடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்து விளையாடி, உடலுறுப்புக்களின் செயல்பாட்டை பாதித்து, ஆரோக்கியத்தையே சீரழித்துவிடும்.

பலர் உடலில் இருக்கும் நோய்க்கிருமிகளை அழிக்க ஆன்டி-பயாடிக்குகளை எடுப்பார்கள். ஆனால் கடையில் விற்கப்படும் ஆன்டி-பயாடிக்குகளால் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது.

ஆனால் நம் முன்னோர்கள் பின்பற்றிய நாட்டு வைத்தியத்தை மேற்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைவதோடு, பல்வேறு நன்மைகளும் உடலுக்கு விளையும்.

அற்புத நாட்டு மருந்து
கீழே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, நோய்க்கிருமிகளை அழிக்கும் ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் ஏராளமான மருத்துவ குணங்களை தன்னுள் கொண்டவை.

நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. எனவே பல நாட்டு மருந்துகளில் பூண்டு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டுவதோடு, இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். மேலும் பழங்காலத்தில் உடலின் உட்காயங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைக் குறைக்க வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
இஞ்சி
இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகும். இதற்கு இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் சக்தி வாய்ந்த மருந்துவ குணம் தான் காரணம்.



நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் உட்பொருட்கள் உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். எனவே அனைத்து நாட்டு வைத்தியத்திலும் மஞ்சள் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
தேன்
தேன் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது என்பதை மறவாதீர்கள்.

நாட்டு மருந்து தயாரிக்க உதவும் பொருட்கள்
தேவையான பொருட்கள்:
பூண்டு – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1/4 கப் (துருவியது)
ஆப்பிள் சீடர் வினிகர் – 3 கப்
ஹார்ஸ் ராடிஷ் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 3 டேபிள் ஸ்பூன்

நாட்டு மருந்து செய்யும் முறை செய்முறை
* ஒரு பௌலில் ஆப்பிள் சீடர் வினிகரைத் தவிர அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கண்ணாடி பாட்டிலில் அந்த பொருட்களைப் போட்டு, ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்த்து நன்கு கலந்து, மூடியால் மூடி, இருட்டான மற்றும் குளிர்ச்சியான இடத்தில் 14 நாட்கள் வைக்கவும்.
* 14 நாட்கள் கழித்து, அதனை வடிகட்டி, தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

உட்கொள்ளும் முறை
இந்த மருந்தை தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் என உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைந்து, நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, உடலின் வலிமையுடன் இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.