நீரில் மூழ்கி மீன்களைப் பிடிப்பதில் சிறப்பாகச் செயல்படும் பறவை கார்மோரண்ட். உலகின் பல பாகங்களிலும் இப்பறவை காணப்படுகிறது. இப்பறவை களில் சில குடும்பங்கள் எப்போதும் கடல் அருகிலேயே வாழ்கின்றன. மற்றவை நதிகள், ஏரிகள், சதுப்பு நிலங்களின் அருகே வசிக்கின்றன.
இப்பறவைகளின் எல்லா இனத்திற்குமே உடலின் மேல்பகுதி இறகுகள் கறுப்பாக இருக்கும். ஆனால், இது கறுப்பல்ல. தூரத்திலிருந்து காணக் கறுப்பாக இருந்தாலும், இதன் இறகுகளின் நிறம் கரும்பச்சை அல்லது கருநீலம். உலோகப் பளபளப்புடன் கூடியவை. நீர்நிலையை அடுத்துள்ள பாறைகளில் அமர்ந்தபடி, இறக்கைகளை வெயிலில் காய வைத்துக் கொண்டிருக்கும்.
நீரில் மீன் வரவைக் கண்டதும், 'டைவ்' அடித்துப் பாயும். அலகில் பிடித்த மீனுடன் குழந்தைகளுக்குத் தர கூட்டை நோக்கிச் சிறகடித்துப் பறக்கும். கார்மோரண்ட் பறவையை, பாட்டில் போன்ற அதன் உடல் அமைப்பிலிருந்து எளிதாக இனங்கண்டு கொள்ளலாம். இதற்கு நீண்ட மெலிதான கழுத்து உண்டு.
பறக்கும் போது தன் கழுத்தை முழுமையாக முன்னால் நீட்டிக் கொண்டு பறக்கும். மற்ற கடல் பறவைகளைப் போலல்லாமல் இது, சுள்ளிகளையும், கடல் பாசிகளையும் கொண்டு கூடு அமைக்கிறது. தன் குஞ்சுகளுக்கு அளிக்கும் உணவை இவை விழுங்கி, சேமித்துக் கொண்டு, பிறகு கக்கி வெளியே கொண்டு வந்து குஞ்சுகளுக்குத் தருகிறது. முழு மீனையும் விழுங்கும் ஆற்றல் பெற்றவை இப்பறவைகள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.