14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட ஒருவர், அச்சிறுமியை வேறு ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்ற கொடுமை மும்பையில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பனாரஸ் பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது சிறுமி, டில்லியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வந்தார். அந்த சிறுமியை அங்கிருந்த அழைத்து சென்ற உறவினர் ஒருவர், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அந்த சிறுமியை மும்பை அழைத்து வந்த கணவர், ஒரு வீட்டில் ரூ.50 ஆயிரம் பணத்திற்கு விற்றுவிட்டார். அந்த இடத்தில் வீட்டு வேலை செய்வதற்காக அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் என்பது சிறுமிக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது.
வேலை செய்ய மறுத்த அந்த சிறுமியை அவரின் கணவர் மற்றும் விலைக்கு வாங்கிய பெண்ணும் கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து எப்படியோ தப்பித்து வந்த அந்த சிறுமி, இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
வீட்டு வேலை செய்து வந்த இடத்தின் அருகே வசிப்பர்கள் அறிவுரைப்படிதான் தான் போலீசாரிடம் புகார் கொடுத்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் தலையில் சில காயங்கள் இருந்தன. எனவே போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.