அந்தியூர் அருகே தூங்கி கொண்டிருந்த மனைவியை அவரது கணவர் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). இவரது மனைவி பழனியம்மாள் (46). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களது மகள் மாலதிக்கு (25) திருமணமாகி விட்டது. மகன் குருசாமி என்ற மகனுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். ராமச்சந்திரனுக்கு மனைவி பழனியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டார்.
இரவு வீட்டில் பழனியம்மாளும் மகள் மாலதியும் தூங்கி கொண்டிருந்தனர். மகன் குருசாமி மாமனார் வீட்டுக்கு போய் விட்டார். நள்ளிரவில் ஆத்திரத்துடன் அங்கு வந்த ராஜேந்திரன் அரிவாளால் தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டினார். இதில் பழனியம்மாள் கழுத்தில் பலமான வெட்டுகள் விழுந்து ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அருகே படுத்திருந்த மகள் மாலதி எழுந்து பயத்துடன் வெளியே ஓடி சென்று சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இதை அடுத்து, ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து மாயமான ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.