Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

மனைவி உறவில் சந்தேகம்: கட்டையால் தாக்கி கருவை கலைத்த கணவன்


ஆப்கானிஸ்தானில் மனைவிக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகப்பட்டு, கணவன் கட்டையை வைத்து தாக்கி 6 மாத கருவை கலைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அஸ்காமிஸ்க் மாவட்டத்தில் அப்துல் கலீல் அசீர்(20) என்பவர் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். வேறொரு ஆணுடன் தன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு கொடுமை செய்துள்ளார்.

அப்துல் கலீலின் தாய் மற்று சகோதரி அவரது மனைவியை கயிற்றால் கட்டி வைத்து அடித்துள்ளனர். அப்போது அவர் கட்டையால் தாக்கியதில் 6 மாத கரு கலைந்துள்ளது. தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வெறிச்செயலுக்கு மகளிர் விவகார துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அப்துல் தப்பியோடியதால், மற்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.