Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

பெண்களே வீட்டு பொருட்கள் பராமரிப்பது எப்படி


வீடு என்பது செங்கல் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல. மனிதர்கள் குடியேறுவதோடு, புழங்கக்கூடிய மற்ற பொருட்களும் வீட்டுக்குள் கொண்டு வரப்படும்போதுதான் கட்டிடம் என்பது முழுமையான வீடாக மாறுகிறது. உறவுகள் மனம் மகிழ்ந்து இனிமையுடன் வாழ்வதற்கான இடம்தான் வீடு. வசதியான வாழ்வுக்காக பல்வேறு பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் அவற்றை முறையாக பராமரித்து வர வேண்டியதும் முக்கியம். வீடுகளில் உபயோகத்தில் இருக்கும் பல்வேறு விதமான பொருட்களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப பராமரிப்பதை ஒரு கலையாகவே குறிப்பிடலாம். பர்னிச்சர் வகைகளை ஒரு விதமாகவும், மின்சாதனபொருட்களை ஒரு விதமாகவும், துணிமணிகளை இன்னொரு விதமாகவும் பராமரிக்க வேண்டியதாக இருக்கும். வீட்டுப்பொருட்கள் பராமரிப்பில் ஒரு சில முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்

‘வாக்குவம் கிளனர்’

வீடுகளில் பயன்படுத்தும் மின்சார சாதனங்களில் கொஞ்சம் எளிய கருவியாக வாக்குவம் கிளனர் இருக்கிறது. இல்லத்திற்குள் படிந்துள்ள தூசிதுரும்புகளை உறிஞ்சி எடுக்கும் அதை பராமரிப்பது அல்லது சுத்தம் செய்வது என்பது எளிதான விஷயம் என்றே சொல்லலாம். காரணம், அதில் சிக்கலான சர்க்கியூட்டுகள் எதுவும் கிடையாது. மேலும், பெரிய அளவிலான தொழில்நுட்ப அம்சங்களும் இல்லை. அதனால் பராமரிக்கும் வேலைகள் சுலபமாக இருக்கும்.

மற்ற மின்சார சாதனங்களைப்போல தொல்லை தராமல் ‘வாக்குவம் கிளனர்’ நீண்ட நாட்கள் வேலை செய்யும். பராமரிப்பு வேலைகள் செய்யப்படும்போது மறக்காமல் மின்சார இணைப்பை துண்டித்து விடுவது அவசியம். ‘வாக்குவம் கிளனரின்’ நீளமான குழாய்கள் அவ்வளவு வலுவானவையாக இருப்பதில்லை. அதனால் தரையில் அல்லது பிற இடங்களில் அதன் உராயும் தன்மை குறைவாக இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழாய்களின் மேல் கனமாக இருக்கும் பொருட்களை வைத்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குழாய்கள் பாதிக்கப்பட்டுவிட்டால் அதன் காற்று உறிஞ்சும் திறன் குறைந்து விடும். அத்துடன் அதன் மின்சார இணைப்புகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் கவனிப்பது அவசியம். குப்பைகள் சேரும் இடமான ‘கிளனர் பேக்கை’ அவ்வப்போது சுத்தம் செய்வதும், ‘பிரஷ் ஹேண்டில்’ பகுதியை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டியதும் முக்கியம்.

தொலைக்காட்சி பெட்டி

துல்லியமாகவும், பளிச்சென்றும் காட்சிகளை தரும் எல்.ஈ.டி வகை தொலைக்காட்சி பெட்டிகள் எல்லா வீடுகளிலும் சாதாரணமாக இருக்கின்றன. அதன் நிகழ்ச்சிகளை மன மகிழ்ச்சியுடன் கண்டு களிக்க எல்லோரும் ஒரே சமயத்தில் விரும்புவதால் யார் தொலைக்காட்சியை பார்ப்பது என்பதில் அவ்வப்போது வீட்டில் சிறு சண்டைகள் வருவது சகஜமான விஷயம். பெரிய அளவிலான டி.வி.பெட்டிகள் இப்போது மெல்லிய வகை ‘ஸ்லிம் சைஸ்’ வடிவத்திற்கு மாறிவிட்டன. இடத்தை அடைத்துக்கொள்ளும் என்ற கவலையில்லாமல் சுவரில் ஆணி அடித்து மாட்டிக்கொள்ள முடியும். சுவரில் மாட்டும்போது வெப்பம் அல்லது ஈரப்பதம் ஆகியவை தாக்கும் இடமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக அறைக்குள் வரக்கூடிய சூரிய வெளிச்சம் அதன்மீது படராதவாறு பொருத்துவது முக்கியம். அதன் ‘ஸ்க்ரீனில்’ தண்ணீர் அல்லது மற்ற திரவப்பொருட்கள் படாதவாறும் பார்த்துக்கொள்வது அவசியம். டி.வி. ஸ்கிரீன்களை துடைப்பதற்கு விஷேசமான திரவ வடிவ ‘கிளனர்கள்’ இருக்கின்றன. அவற்றால் சுத்தப்படுத்தலாம் அல்லது காட்டன் துணி, ‘மைக்ரோ பைபர்’ துடைப்பான்களை பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.

படம் நல்ல ‘குவாலிட்டியுடன்’ இருக்க வாரம் ஒருமுறை டி.வி ஸ்கிரீனை சுத்தம் செய்வது அவசியம். ‘டிஷ்யூ பேப்பர்கள்’, ‘ஆல்கஹால்’ கலந்த பொருட்களால் துடைப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். வெளிப்புறம் இருக்கும் ஒயர்களை மடித்து இணைப்புகள் தரப்பட்டிருப்பதும் தவறாகும். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கண்டிப்பாக டி.வி பார்ப்பதை தவிர்ப்பதோடு, கேபிள் இணைப்பையும் துண்டித்து விட வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.