செம்பருத்தி பூவில் ஏராளமான விசேஷ குணங்கள் இருக்கின்றன. செம்பருத்தியின் வேர், இலை, பூ போன்றவைகளில் மருத்துவ குணம் உள்ளது. பெண்களின் கூந்தலுக்கு அடர்த்தியையும், நிறத்தையும் தரும் சக்தி செம்பருத்திக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி சரும நோய்களையும் தீர்க்கலாம்.
மாதவிலக்கு காலத்தில், அதிகமாக வெளிப்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் சக்தி செம்பருத்தி பூ மொட்டுக்கு உண்டு. இதனை பாலில் சிறிது நேரம் போட்டு குடிக்க வேண்டும். பூ மற்றும் மொட்டை தின்னவும் செய்யலாம். சொறி, சிரங்கு, போன்ற தோல் வியாதிகளை போக்க தேங்காய் எண்ணையில் செம்பருத்தி பூவைப் போட்டு காய்ச்சி, அந்த எண்ணையை தடவி வர வேண்டும். செம்பருத்தி பூவை கசக்கி தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பின் குளித்தால் முடி உதிராது.
தேங்காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா? புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்ஸ், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ,பி,சி,டி ஆகிய சத்துக்கள் உள்ளன. கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். குழந்தைகளுக்கு கடைகளில் இனிப்பு வகைகள் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக, தேங்காய் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு எலும்பு பலமும், வளர்ச்சியும் கிடைக்கும். நன்றாக பசிக்கும்போது தேங்காய் தின்றால், பசி மறையும். அஜீரணக்கோளாறு, அல்சர் இருப்பவர்கள் தேங்காய், புளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். தேங்காயில், இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், அதனைச் சாப்பிட்டால் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினின் அளவு அதிகரிக்கும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.