எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் எம் குருநாதருக்கும் நன்றி. சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் என்ற பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி இதுவரை 3500 பேர் தங்களின் முழுமையான தகவலை கொடுத்து நம் தளத்தில் இணைந்துள்ளனர் இதில் வெளிநாட்டில் வசிக்கும் நம் தமிழ் உறவுகளே அதிக அளவில் இணைந்துள்ளனர் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாகவே காடுகளில் மூலிகை தேடியபடி நம் பயணம் இருந்தது, இதற்காக சதுரகிரி, கொல்லிமலை போன்ற பகுதியில் இருந்த நம் நண்பர்களின் ஒத்துழைப்பும் அன்பும் வார்த்தையால் விவரிக்க முடியாது.
நம்முடன் வந்த மலைவாழ் மக்களில் ஒருவர் மழையே இல்லாமல் காடுகளில் செடி,கொடி எல்லாம் இல்லாமல் சென்று விடும்போல் இருக்கிறது, குருநாதரிடம் மழைக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார், நாமும் கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறோம் என்றோம். அருகில் வந்தவர் சிரித்துவிட்டு கூறினார் மழைக்காலத்திலே மழை வரவில்லை கோடைகாலத்திலா மழை வரும் என்று. அப்போது உடனடியாக தோன்றிய யோசனை குறிப்பிட்ட ஒரு நாளில் நம் வாசகர்கள் அனைவரும் இயற்கை அன்னையிடம் மழைக்காக ஒரு பிரார்த்தனை வைக்கலாம் என்பது தான். ஆயிரக்கணக்கான இமெயில்கள் மூன்று நாட்களுக்கு முன்பு வரை உள்ள அத்தனை இமெயில்களுக்கும் பதில் அனுப்பிவிட்டு மழைக்கான பதிவு போடலாம் என்று தொடங்கும் முன்பே மழைச்செல்வத்தை அள்ளிக்கொடுத்த நம் குருநாதருக்கு நன்றி. நன்றி.
இதய நோய்
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி.
மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில விடயங்களை நம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், சில வைத்திய முறைகளை கோடி தனம் ஈந்தாலும் வெளியே கூறவேண்டாம் என்று இருக்கும், சரி யாரையாவது ஒருவரை நியமித்து மருந்து செய்து கொடுக்க சொல்லியதன் பெயரில் அன்போடு அவரும் செய்து கொடுப்பார், ஆனால் சிலர் காசுக்குத்தானே இவர்கள் மருந்து கொடுக்கிறார் என்று அலட்சியத்தோடு எத்தனை பேர் இந்த மருந்து சாப்பிட்டு இருக்கின்றனர் ? அவர்களின் போன் நம்பர் சொல்லுங்க , பக்கவிளைவுகள் இருக்கா ? மருந்து குணப்படுத்துவதற்கு என்ன உத்ரவாதம் கொடுங்கிறிங்க என்று பல கேள்விகள், இவர்களுக்கு ஒரே பதில் இவர்கள் வியாபரிகள் அல்ல, இயற்கை உணவு உலகத்தில் இருந்து இதுவரை வெளிவந்த இனி வெளிவரும் எந்த மருந்தும் பக்கவிளைவுகள் கிடையாது. தன் வயதான காலத்திலும் நாம் சிலரிடம் மருந்து செய்து கொடுக்கலாமா என்று கேட்ட ஒரு வார்த்தைக்காக மருந்து செய்து கொடுக்கும் நபர்களிடம் இது போல் கேட்கும் கேள்வி அவர்கள் மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதிவில் தெளிவாக தெரியபடுத்தியும் நம்பிக்கை இல்லை என்றால் எந்த மருந்தும் வேலை செய்யாது.
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம் தொடர்புடைய அனைத்து
நோய்களையும் நீக்கும் மருந்து.
வெண்தாமரை பூ- 4 பங்கு
ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு
வெண் தாமரை பூவை நன்றாக நிழலில் உலர்த்திவைத்துகொண்டு அதன் பின் மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல் வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின் முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்து , நிழலில் உலர்த்தி காயவைத்திருக்கும் தாமரை பூவுடன் நன்றாக இடித்து பொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிட வேண்டும். இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் இதயநோயே வராது,
முக்கிய குறிப்பு : மருந்து சாப்பிடும் காலங்களில் அசைவ உணவு, ஊறுகாய், அப்பளம், மிகக்குளிர்ந்த நீர், மைதாமாவில் தயாராகும் பொருட்களை தவிர்க்க வேண்டும், மருந்து எவ்வித பத்தியமும் பக்கவிளைவுகளும் கிடையாது, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்,



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.