Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

மாநிலத்திலேயே இருக்கக் கூடாது..! இட ஒதுக்கீட்டுக்காக போராடியவருக்கு நிபந்தனை ஜாமீன்


படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டுக்காக போராடிய ஹர்திக் படேல் குஜராத்தை விட்டு 6 மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

குஜராத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்விகளில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் என்ற இளைஞர் போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகவும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் ஹர்திக் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டது.

குஜராத்தில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக சூரத்தில் மிகப்பெரும் கிளர்ச்சியை நடத்தி ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் படேல், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது, தனக்கு விடுதலை அளிக்கப்பட்டால் வன்முறையின்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுப்பேன் என்று ஹர்திக் படேல் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், ஹர்திக் படேல் குஜராத்தை விட்டு 6 மாதங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, ஹர்திக் படேல் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவரால் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்று ஹர்திக் படேல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.