Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

சூப்பரான கிரீன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

எலும்பு இல்லாத சிக்கன்   - அரை கிலோ
புதினா இலைகள்   - இரண்டு கைப்பிடி
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
பூண்டு  - 15 பல்
இஞ்சி   - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மிளகு தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
சோள மாவு   - இரண்டு ஸ்பூன்
உப்பு   - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

* சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.

* புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.

* மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.

* அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.

* சுவையான கிரீன் சிக்கன் வறுவல் ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.