Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 8, 2016

குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

குடைமிளகாய் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு  - 1 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் சிறிய துண்டு - 1
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு

தாளிக்க

பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை.

செய்முறை :

* சின்ன வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும்,

* அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

* இவை யாவும் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

* அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

* சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.