Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

45 செய்தி தாள்களையும், 16 தொலைக்காட்சிகளையும் மூட அரசு முடிவு


துருக்கியில் 45 செய்தி தாள்களையும், 16 தொலைக்காட்சியும் மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.



துருக்கியில் கடந்த 15-ம் தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில், புரட்சி படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மூத்த ராணுவ தளபதிகள் உட்பட 3000 வீரர்களும் நீதித் துறையைச் சேர்ந்த 2750 நீதிபதிகளும் கைது செய்யப்பட்டனர்.

அந்த வரிசையில் மூத்த அரசு அதிகாரிகள் உட்பட 8777 அரசு ஊழியர்களை அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் பணிநீக்கம் செய்தது. 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துனர். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஊடக அமைப்புகளை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 45 செய்தி தாள்களையும், 16 தொலைக்காட்சி சேனல்களையும் மூடவும் அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.