சென்னையை மையமாக வைத்து, தங்க கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும், சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களுக்கு கடத்தப்பட்ட, 50 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சென்னையை நோக்கி கடத்தி வரப்பட்ட, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் தங்கக்கட்டிகளை, வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன், தஞ்சை மற்றும் துாத்துக்குடி பகுதிகளில், கடல்வழியாக கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கடலோர பகுதிகளில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், கடத்தல்காரர்கள், தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு, தங்கம் கடத்த பஸ் மற்றும் ரயில்களை தேர்வு செய்துள்ளனர்.
l ஜூன் 22ம் தேதி, மியான்மரில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்ட,1.62 கோடி ரூபாய் மதிப்பிலான, 5.3 கிலோ தங்கக்கட்டிகளை, ஆந்திராவில் பஸ்சில் வைத்து, சென்னை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
l அதற்கு, இரு நாட்களுக்கு முன், மியான்மரில் இருந்து சென்னைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட, 2.5 கிலோ தங்கத்தை, அசாம் மாநிலம், கவுகாத்தியில் ரயிலில் பறிமுதல் செய்தனர்
l ஜூன் 12ம் தேதி, சென்னைக்கு வந்த ஹவுரா ரயிலில், பயணம் செய்த சிலரிடம் இருந்து, 2.7 கோடி மதிப்புள்ள, எட்டு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
l ஜூன் 18ம் தேதி, இலங்கையில் இருந்து, கடல்வழியாக கொண்டு வரப்பட்ட,
8.73 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், ஒரு பஸ்சில் திருச்சி அருகே
பறிமுதல் செய்யப்பட்டன. அவை, மியான்மரில் இருந்து கடத்தப்பட்டவையே
l சென்னை விமான நிலையத்தில், ஏப்ரலில், 3.45 கிலோ தங்கம்; மே மாதத்தில், 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு 1.5 கோடி ரூபாய்
l பிப்., 11ம் தேதி, துாத்துக்குடியில், 12 கிலோ தங்கம், ஜன., 1ம் தேதி, 8.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள், செம்மரக் கட்டை கடத்தலுக்கு கெடுபிடி அதிகரித்துள்ளதால், கடத்தல்காரர்கள் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளதாக, புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர்.
அவிழாத மர்ம முடிச்சு :
தமிழகத்திற்கு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள், போதைப் பொருள் மற்றும் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவது, தொடர்ந்தபடி உள்ளது.
இது தொடர்பாக, ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், இவ்வாறு சிக்குவோர் வெறும் அம்புகள் தான். அவர்களை கைது செய்வதோடு, புலனாய்வு அமைப்பினர் பணியை நிறுத்தி விடுகின்றனர். அந்த கடத்தல் பொருட்கள் தொடர்பாக, பெரும்புள்ளிகள் எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் கைதாகாத வரை, கடத்தல் தங்கு தடையின்றி தொடரும். சிறிய அளவு கடத்தல் பொருட்கள் அவ்வப்போது சிக்கினாலும், பெரும்பகுதி போக வேண்டியவர்களுக்கு போய்க்கொண்டுதான் இருக்கிறது. இதுகுறித்து, முன்னணி தங்க நகை விற்பனையாளர்களை கேட்ட போது, தயக்கமே பதிலாக கிடைத்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.