Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

ரூ.4 கோடி மதிப்புள்ள 12 கிலோ நகையுடன் உலா வரும் தங்க பாபா


உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல் வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான துறவிகள் பங்கேற்கின்றனர். அந்த வகையில் அண்மையில் நடந்த ஒரு கும்பமேளாவில் அனைவரையும் வெகுவாக ஈர்த்தவர் தங்க பாபா. இவர் பெயர் மட்டும் தங்க பாபா அல்ல. உடலும் தங்கம் தான். அந்த அளவுக்கு உடல் முழுவதும் ரூ.4 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து தான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆரம்பத்தில் வெறும் 5 கிலோ தங்க நகைகளை மட்டுமே அணிந்து வலம் வந்த இவர், ஒவ்வொரு ஆண்டும் அதன் எடையை அதிகரித்து தற்போது 12 கிலோவாக உயர்த்தியுள்ளார்.

இத்தனை தங்கம் எங்கிருந்து வந்தது என கேட்டால், ‘‘எல்லாம் மேலே இருக்கும் இறைவன் கொடுத்தது’’ என்கிறார் முற்றும் துறந்த இந்த துறவி. தங்க நகை கடையாகவே இவர் வலம் வருவதால், இவருக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஹரித்வாரில் இருந்து டெல்லியில் உள்ள தனது ஆசிரமத்துக்கு காரில் வந்தபோது, வழியில் மீரட் அருகே இவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் காரின் கூரை மீது அமர்ந்து தனது பயணத்தை அவர் தொடர்ந்தார். அப்போது அவரை பார்த்த பக்தர்கள் மட்டுமின்றி, போலீஸார் சிலரும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு ஹரித்வாரில் இருந்து டெல்லிக்கு யாத்திரை யாக அவர் வந்தபோது தனது பாது காப்பு செலவுக்காக மட்டும் ரூ.72 லட்சம் செலவிட்டார். இந்த ஆண்டு அந்த நிதியை ரூ.1 கோடியாக உயர்த்தி இருக்கிறார் தங்க பாபா.

துறவியாவதற்கு முன், இவர் ஒரு ஜவுளி வியாபாரியாக இருந்தாராம். அப்போதெல்லாம் அவருக்கு தங்கத்தின் மீது ஆசையே இல்லையாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.