Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

அமெரிக்காவில் கொடூரம்.. 4 குழந்தைகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்


அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் 4 குழந்தைகளை பெற்ற தாயே குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் உள்ள கோல்ப் மைதானம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்த ஒரு பெண்மணி, தனது குழந்தைகள் 4 பேரையும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இருப்பினும் யார் போன் செய்தது என்பது தெரியவில்லை.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் போலீசார் விரைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என நான்கு குழந்தைகள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிந்தது. 

சம்பவம் நடந்த குடியிருப்பில் என்ன நடந்தது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். குழந்தைகள் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த அதிகாரிகள், கொலை செய்யப்பட்ட அனைவரும் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்தனர். 

விசாரணையில் அந்த குழந்தைகளின் தாய் கொலை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த்ப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவம் அதிர்ச்சி தரும் ஒரு தீய செயல் என்று ஷெல்பி கவுண்டி ஷெரிப் பில் ஓல்ட்ஹாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆனால், பெண் தனது குழந்தைகளை கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை. 

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பொதுமக்கள், அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.