சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டிக்குக் கிடைத்து வரும் தகவல்களால் அதிர்ந்து போயிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 'ஈரோடு மாவட்டத்தில் என்.கே.கே.பி ராஜாவை நீக்கும் முடிவில் தலைமை இருக்கிறது' என்கின்றனர் தி.மு.க சீனியர்கள். ' நீக்கினால் நீக்கட்டும். இதற்கு எதற்கு விசாரணைக் கமிட்டி?' எனக் கொந்தளிக்கிறார் ராஜா.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தி.மு.கவின் குறுநில மன்னராகவே வலம் வந்தார் என்.கே.கே.பி.ராஜா. அவரது தந்தை பெரியசாமிக்கு அடுத்தபடியாக, ராஜாவின் அதிரடிகளுக்குக் கட்டுப்பட்டனர் உடன்பிறப்புகள். கடந்த தி.மு.க ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பழனிச்சாமி என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரால் பதவி இழந்தார். இதன்பின்னர் மாவட்டச் செயலாளர் பதவியையும் கட்சித் தலைமை பறித்தது. ஆனாலும், ஈரோடு மாவட்டத்தில் யாருக்கு 'சீட்' என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் ராஜாவின் கையிலேயே இருந்து வந்தது. இதற்கிடையில், ஈரோட்டில் பவர்ஃபுல் மனிதராக முத்துச்சாமி வலம் வர ஆரம்பித்தார்.

நிர்வாகிகள் நியமனத்தில் ராஜாவுக்கு 60 சதவீதமும் முத்துச்சாமிக்கு 40 சதவீதமும் ஒதுக்கப்பட்டன. தனக்கு வேண்டப்பட்ட நல்லசிவத்தை வடக்கு மா.செவாக நியமித்தார் ராஜா. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் ராஜாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் 'சீட்' ஒதுக்கப்படவில்லை. தேர்தல் முடிவில், ஈரோடு மாவட்டத்தில் படுதோல்வியைச் சந்தித்தது தி.மு.க. இதைப் பற்றி ஆராய்வதற்காக பூச்சி முருகன், சூர்யா வெற்றிகொண்டான், டாக்டர்.மஸ்தான் உள்ளிட்டவர்கள் தலைமையில் விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. இவர்கள் கொடுத்த அறிக்கையால் அதிர்ந்து போயிருக்கிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் ஒருவர், " தேர்தலில், ராஜாவின் ஆட்களுக்கு 'சீட்' கொடுக்கப்படாததால், மாவட்டச் செயலாளர் உள்பட 4 ஒன்றியச் செயலாளர்களை ராஜினாமா செய்யச் சொன்னார் ராஜா. அவர்கள் மறுத்துவிட்டனர். ' நான் இப்போது ராஜாவோடு இல்லை' என நல்லசிவமும் ஒதுங்கிவிட்டார். ஏழு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் வன்னியர் சமூக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால், ' யாரும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது' எனச் சொல்லிவிட்டார் ராஜா. கிழக்குத் தொகுதியில் சந்திரகுமாரும், மேற்குத் தொகுதியில் முத்துச்சாமியும் தோற்றதற்கு ராஜா ஆட்களின் உள்ளடியே காரணம். தேர்தல் பிரசாரத்திற்காக ராஜா ஒரு வேனைக் கொடுத்திருந்தார். 'எனக்கே சீட கொடுக்கலை. நான் கொடுத்த வேன் மட்டும் எதற்கு?' என அதையும் வாங்கிக் கொண்டார். அவரைப் பற்றி விரிவான அறிக்கையைக் கொடுத்துள்ளனர். கட்சியின் அடிமட்ட உறுப்பினர் பதவியில் இருந்தே ராஜா தூக்கப்படுவார்" என அதிர வைத்தார் அவர்.
' உங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மையா?' என்ற கேள்வியை என்.கே.கே.பி.ராஜாவிடம் கேட்டோம்.
" சட்டமன்றத் தேர்தலில் நான் வேலை பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஏழு தொகுதிகளிலும் என்னைச் சேர்ந்தவர்களும் வேலை பார்க்கவில்லை. மாவட்டத்தில் தவறான வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்தனர். யார் சொல்லி இவர்களுக்குச் சீட் கொடுத்தார்கள்? இவர்கள் யார் என்றே தெரியாது. இதைப் பற்றி கடிதமும் எழுதியிருக்கிறேன். இதை விசாரிப்பதற்கு எதற்கு ஒரு விசாரணைக் கமிட்டி... ஆய்வுக்குழு?. ஒரு தொகுதியில் தவறான வேட்பாளரைப் போட்டாலும், தொகுதி முழுக்கவே பாதிக்கும். என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும்.
என்னுடைய வேலையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எதுவும் தேவையில்லை. இனி புதிதாகப் போய்த் தேட வேண்டியதில்லை. அரசியலில் மிக முக்கியமானதே அமைச்சர் பதவிதான். நானும் அமைச்சராக இருந்துவிட்டேன். என் அப்பாவும் அமைச்சராக இருந்துவிட்டார். இனி குடும்பத்தைக் கவனிக்க வேண்டியதுதான். 23 ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருந்துவிட்டேன். இருக்கும் வரையில் சரியாக வேலை பார்த்து வந்தேன். இனி அரசியலில் புதிதாக சாதிக்க எதுவும் இல்லை. மற்றவர்கள் அரசியல் செய்யட்டும். மாற்றுக் கட்சிக்குப் போவது அவசியமற்றது. கையாலாகதவர்கள்தான் மாற்றுக் கட்சியைத் தேடிப் போவார்கள்" எனக் கொந்தளித்தார்.
கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார் என்.கே.கே.பி.ராஜா. அறிவாலயத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.