சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், அவரை விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குநர் இல்லத்தின் வருகைப் பதிவேடும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டின் மிகப்பெரிய ஊழல்களாக கூறப்படும், 2ஜி முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களையும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றவர்களையும் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா சந்தித்துள்ளார் என்றும் இது மிகப்பெரிய தவறு என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்தப் புகார் தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.