Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

நார்சிங் உணவில் ஸ்டீராய்டை கலந்ததாக மல்யுத்த வீரர் மீது வழக்குப்பதிவு!


மல்யுத்த வீரர் நார்சிங்கின் உணவில் ஸ்டீராய்டை கலந்த இளம் மல்யுத்த வீரர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ், ஹரியானா மாநிலம்,  சோன்பட் மாவட்டத்தில் உள்ள  ராய் காவல் நிலையத்தில் நேற்று ஒரு  புகார் அளித்திருந்தார். அதில், ''சோன்பட் சாய் மையத்தில் பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஒருவர் ஸ்டீராய்டை கலந்துள்ளதாகக் கூறியிருந்தார். அந்த வீரர் டெல்லி சத்ரசால் மையத்தில் பயிற்சிப் பெற்று வருவதாகவும் நார்சிங் தனது புகாரில்  தெரிவித்திருந்தார்.

நார்சிங்கின் புகாரையடுத்து, சில சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, ஜித்தேஷ் மீது  உணவில் விஷம் கலக்குதல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள ஜிதேஷ்,  ஒலிம்பிக்கில் இரு முறை வெண்கலம் வென்றுள்ள சுஷில்குமாரின் மாமனார் சத்ரபால்சிங்கிடம், டெல்லி சத்ரசால் மையத்தில், மல்யுத்தப் பயிற்சி பெற்று வருகிறார். செல்வாக்குமிகுந்த சிலரின் சதியால்,  ஊக்கமருந்து விகாரத்தில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடப்படாமல்  தனது புகாரில் நார்சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது வரை கைது நடவடிக்கனெதுவும் மேற்கொள்ளப்படவில்லை. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.