மாணவ-மாணவிகளாகிய நாம் சிந்திப்பதாக இருந்தாலும், எழுதுவதாக இருந்தாலும், பேசுவதாக இருந்தாலும், கேட்பதாக இருந்தாலும், பார்ப்பதாக இருந்தாலும் அது நல்லதாகவே இருக்கவேண்டும். நமக்கு நன்மை சேர்வதும், தீமை விளைவதும் நமது செயல்களில்தான் இருக்கிறது. அதனால்தான் ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்கிறார்கள்.
பள்ளியோ, கல்லூரியோ வகுப்பறையில் நல்ல மாணவ-மாணவிகளைத் தேடி நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். அவர்களோடு சேர்ந்தால் ஒருபோதும் நமக்கு தீமை சேராது. தீயவர்களுடன் சேர்ந்தால் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப்போல ஆகிவிடும். தீயவர்கள் ஆபத்தில் சிக்க வைத்து விடுவார்கள். இதற்கு ஒரு உதாரணமாக மகாபாரத கதையில் இருந்து ஒரு நிகழ்வை காணலாம்.
மகாபாரதத்தில் சகுனியை அறியாதவர்கள் இருக்க முடியாது. தீய எண்ணங்களின் மொத்த உருவம் அவன். தனக்கு பிடிக்காதவர்கள் நன்றாக இருந்தால் சகுனியால் நிலைகொள்ள முடியாது. எப்படியாவது அவர்களது நிம்மதியை குலைக்கவேண்டும் என்ற சிந்தனையுடனேயே இருப்பான். அதைப்போல தீய செயல்களை சதாசர்வ நேரமும் செய்யக் கூடியவன் துரியோதனன். ஈவு, இரக்கம் எதுவும் துரியோதனனிடம் எதிர்பார்க்க முடியாது.
இவர்களோடு இணைந்து தீய செயல்களுக்கு துணை நின்றவன், துணிந்து செய்தவன் துச்சாதனன். இவர்கள் 3 பேரும் சேர்ந்ததால் தீமையிலும் தீமைதான் விளைந்தது என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் இந்த தீயவர்களுடன் சேர்ந்த ஒரு நல்லவனும் தீயவனாகி விட்டதையும் அறிவோம். அவன் தான் கர்ணன்.
தன்னோடு நட்பு கொள்ள எத்தனையோ நல்லவர்கள் இருந்தபோதிலும் அவர்களை புறந்தள்ளி துரியோதனன், துச்சாதனன் மற்றும் சகுனி ஆகியோரோடு நட்புகொண்டான். தொடக்கத்தில் நல்ல செயல்களையே செய்த கர்ணன், மேற்கண்ட மூவராலும் தீய செயல்களுக்கு துணை நின்று கெட்டவனாகி விட்டான். வானவரும் வாழ்த்தும் கொடை குணம் இருந்தாலும் கூடா நட்பு, கர்ணனை மிக மோசமானவனாகவே காட்டியது.
இது கதைக்காக மட்டும் சொல்லப்படவில்லை. இயற்கையும் அதை விளக்குகிறது. ஒரு மாம்பழக்கூடையில் மிகவும் இனிப்பான மாம்பழங்கள் பலவற்றை வைத்துவிட்டு, அவற்றுடன் ஒரே ஒரு அழுகிய மாம்பழத்தை வைத்து விட்டு மறுநாள் பாருங்கள். அந்த அழுகிய மாம்பழத்தை ஒட்டியுள்ள நல்ல மாம்பழங்களும் அழுகியிருக்கும்.
இதுதான் நண்பர்களே, கூடா நட்பு கேடாய் முடியும் என்பது. இனியாவது நல்ல நண்பர்களை தேடிக்கொள்ளுங்கள். தீய பழக்கங்களுக்கு விடை கொடுத்து நல்லதை நாடுங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.