Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

மப்டியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபர்: அப்புறம் என்ன செம விருந்து தான்!


உத்தரபிரேதச மாநிலம் சீதாபூரில் சாதாரண உடையில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த வாலிபரை அந்த போலீஸ் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.


பெண் போலீஸ் ஒருவர் சாதாரண உடையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சிக்னலில் நிற்பதற்காக அங்கு நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வாலிபர் சாலையோரம் சென்ற அந்த பெண் போலீசை கிண்டல் செய்துள்ளார்.

வாலிபர் தன்னை கிண்டல் செய்வதை அறிந்த அந்த பெண் போலீஸ் அந்த வாலிபரை பைக்கில் இருந்து இறக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் போலீசின் கையில் இருந்த மோதிரத்தை பறித்துள்ளார்.

வாலிபர் மோதிரத்தை பறித்ததும் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் அவரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. தகவல் கிடைத்ததும் அந்த இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை வாலிபரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.