Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

ஃபேஸ்புக்கில் தமிழ் தெரிந்த நீங்கள் ஸ்பானீஷில் கூட பதிவிடலாம்


உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் ஃபேஸ்புக் தளத்தில் மொழி தெரியாதவர்கள் கூட இனி நமது பதிவை படித்து தெரிந்து கொள்ளும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தவுள்ளது.

வழக்கமாக ஃபேஸ்புக்கில் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவரால், தமிழ் மொழி தெரியாதவர்களிடம் பழக முடியாத நிலை இருந்தது. ஆங்கிலம் தெரிந்தால் யாரிடம் வேண்டுமானாலும் நட்பு கொள்ள முடியும் . இதனால் மொழி தெரியாதவர்களிடம் இருந்து வரும் ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட்களை நாம் பொதுவாக ஏற்பதில்லை. அதனை ரிஜெக்ட் செய்து விடுவதும் உண்டு. மொழிகளால் இருந்த அந்த தடையை உடைக்கும் வகையில் ஃ பேஸ்புக்கில் பன்மொழி கம்போஸ் டூல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இனி தமிழில் ஒரு போஸ்ட் பதிவிடப்பட்டால்,அந்த டூலை பயன்படுத்தி தங்களுடைய நண்பர் ஸ்பானீஷ் தெரிந்தவராக இருந்தால், அந்த பதிவை நீங்கள் ஸ்பானீஷில் வெளியிட முடியும். மலாய் தெரிந்தவராக இருந்தால் மலாய் மொழியிலும் வெளியிட முடியும். சைனீஷ் தோழி இருந்தால், அவருக்காக ஸ்டேட்டஸ் பதிவிட முடியும்.

முதல்கட்டமாக உலகில் அதிகமாக வழக்கத்தில் உள்ள 45 மொழிகளில் இந்த டூலை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது.  எந்த எந்த மொழி என்ற பட்டியல் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நிச்சயமாக தமிழ் அதில் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மொழி அறியாதவர்களிடம் பழக வேண்டியதில் இருக்கும் தர்மச்சங்கடங்களையும் ஃபேஸ்புக்கின் இந்த புதிய முயற்சி போக்கி விடும். இந்த டூலை தற்போது பரிச்சாத்திய முறையில் தாங்கள் பயன்படுத்தி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வருமென்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் இதெல்லாம் செய்யுறது சரிதான். ஆனா நம்மாளுங்க இத்தாலி, ஜெர்மன் பொண்ணுங்ககிட்ட வம்பிழுக்காம இருந்தா அது ரொம்ப சரி!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.