Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2016

எச் ராஜா, ஒய் ஜி மகேந்திரன் மீது நடவடிக்கை: தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்....!


ஐடி இளம்பெண் ஸ்வாதி படுகொலையில் குறிப்பட்ட மதத்தைத் தொடர்புப்படுத்திப் பேசிய எச் ராஜா, நடிகர் ஒய்ஜி மகேந்திரன் வகையறாக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ஸ்வாதி கொலைவழக்கில் சரியான கோணத்தில் பயணித்து உண்மையான குற்றவாளியை கைது செய்த தமிழக காவல்துறையின் நடவடிக்கையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.
அதேவேளையில் இந்த கொலையை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மீது பொய் பழி சுமத்தி பொது ஊடகங்களில் கருத்து பதிந்த பாஜகவின் எச்.ராஜா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் வகையராக்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கும் பட்சத்தில்தான் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற கலவரத்தை தூண்டும் மாபாதகச் செயல்களில் இறங்க நினைக்கும் யாருக்கும் அச்சம் ஏற்படும்.

மேலும் தமிழகத்தில் இதுபோன்ற கொலைகள் நடப்பது புதிதல்ல. பல அப்பாவிகள் கொல்லப்பட்டு இதுவரை கொலையாளிகள் யாரென்றே தெரியாமல் வழக்கின் கோப்புகள் தூசு படிந்து கிடக்கின்றன.
ஸ்வாதி கொலையில் காட்டிய முனைப்புகளை போல், கொல்லப்படுவது விலை மதிக்க முடியாத மனித உயிர் என்கிற பொதுவான பார்வையில் செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.