கல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்க கூடாது என்று புதிதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, ஸ்ம்ரிதி இரானியிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, புதிதாக கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட பிரகாஷ் ஜவடேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜவடேகர், முதல்முறையாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''எனக்கு அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது ஸ்ம்ரிதி இரானி பல்வேறு சிறப்பான பணிகளை செய்துள்ளார். அந்தப் பணிகளை நான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வேன்.
மாணவர் போராட்டத்தில் இருந்து உருவானவன் நான். ஆகையால், அனைவருடனும் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது எனில், அங்கு போராட்டத்துக்கான அவசியம் இருக்காது. கல்வி என்பது மாணவர்களை மையமாக கொண்டதாகவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே கல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருத்தல் கூடாது.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தற்போது ஈடுபட்டுள்ளது. கல்வியானது, தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பது அவசியமாகும். நமது கல்வி முறையை புதுமையானதாக நாம் மாற்றியமைக்க வேண்டும். நமது நாட்டின் கல்வித் தரம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.