Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

ஏழைகளுக்கு நீதிமன்றமே கோயில் - விஷ்ணுப்பிரியாவின் தந்தை


டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்துக் கருத்து தெரிவித்த அவரின் தந்தை ரவி, 'ஏழைகளுக்கு நீதிமன்றமே கோயில்' என்று கூறியுள்ளார்.

நாமக்கல் பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா, கடந்த கடந்த 2015 ம் ஆண்டு, ஆகஸ்ட் 18 ம் தேதி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு, அப்போது நாமக்கல் மாவட்ட எஸ். பியாக இருந்த செந்தில்குமார்  உள்ளிட்ட  பிற  காவல்துறை  அதிகாரிகள்  கொடுத்த  அழுத்தம்தான் காரணம் என்று கூறப்பட்டது . அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை அதிகாரிகள் மத்தியிலும் சர்ச்சைகள் தீவிரமாக எழுந்தன.

இந்நிலையில், ஒரே துறையில்  உள்ள அதிகாரிகள்  மீதே குற்றச்சாட்டுகள்  இருப்பதால் இந்த வழக்கு நேர்மையாக  நடைபெறாது என  சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை  நடத்துமாறு  தமிழக அரசு  அறிவுறுத்தியது. ஆனாலும் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றம்  ஏற்படாததைத் தொடர்ந்து, மகளின் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, அவரின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

நேற்று  இந்த வழக்கை  விசாரித்த உயர்   நீதிமன்றம், டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.


இது தொடர்பாக  விஷ்ணுபிரியாவின்  தந்தை ரவியைத் தொடர்பு கொண்ட போது,"இது  தர்மத்திற்கு  கிடைத்த முதல் வெற்றி.  நேர்மையாகப்  பணியாற்றிய என்னுடைய மகளின்  சாவிற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்.  நான்  யாரையும் குறை  கூற   விரும்பவில்லை .ஆனால்   இந்த வழக்கை சி.பி.ஐ  விசாரித்தால் உண்மை தெரியவரும்.  சி.பி.ஐ. மீது நம்பிகை உள்ளது . மேலும்  உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்திற்குத் தலை வணங்குகிறேன்.  நீதிமன்றங்கள் தான்  ஏழைகளின்  கோயில். நேர்மையான  தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளே  அங்குள்ள தெய்வம். சி.பி.ஐ.க்கு  எங்களது  முழு  ஒத்துழைப்பு இருக்கும் என்றார் நம்பிக்கையோடு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.