Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2016

DRS-இல் LBW விதிகளில் மாற்றம்


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.



இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்திலுமுள்ள ஏதாவது விக்கெட்டைப் பந்து தாக்குமாயின், அந்த விக்கெட்டின் நடுப்பகுதியில், பந்தினுடைய அரைவாசிக்கும் மேற்பட்ட பகுதி தாக்கினால் மாத்திரமே ஆட்டமிழப்பு வழங்கப்படும்.



ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதியின்படி, பந்தின் அரைவாசி தாக்க வேண்டிய பகுதியாக, விக்கெட்டின் ஓரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், அதிகளவிலான ஆட்டமிழப்புக் கோரிக்கைகள், மாற்றப்பட்டு வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாற்றம், ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அல்லது அதற்குச் சற்று முன்னர் ஆரம்பிக்கும் தொடர்களில் அமுல்படுத்தப்படும். ஆனால், நடுவர் மீள்பரிசீலனைத் திட்டமென்பது, அனைத்துத் தொடர்களுக்கும் இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.