Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2016

4 கொடிய விஷ பாம்புகளிடமிருந்து 8 பேரின் உயிரை காப்பாற்றி உயிரை விட்ட பாசமுள்ள நாய்


தனது எஜமானின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, நான்கு கொடிய விஷப்பாம்புகளிடம் போராடி, உயிரை விட்ட பாசமுள்ள நாய் பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது.

ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ள சேப்கபூர் என்ற கிராமத்தில் விஷப் பாம்புகள் அதிகம்.  அதனால், அவைகளை வீட்டிற்குள் வராமல் தடுப்பதற்காக, அந்த கிராம மக்கள் வீட்டினில் நாய்களை வளர்ப்பது வழக்கமான ஒன்று.

அதுபோல், திபாகர் ரய்தா என்பவர் சமீபத்தில் ஒரு டாபர் மேன் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். இந்த நாய் எந்த விஷ ஜந்துக்களையும் வீட்டிற்குள் உள்ளே நுழைய விடாமல், தனது எஜமானின் வீட்டை பாதுகாத்து வந்தது.

கடந்த திங்கள் கிழமை, அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து வந்த நான்கு கொடிய விஷ பாம்புகள்  திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளன. இதனைக் கண்ட அந்த நாய்,  கடுமையாக சண்டையிட்டு, அந்த பாம்புகளை கடித்துக் கொன்றது. ஆனால், அந்த பாம்புகள் கொத்தியதில், உடலில் விஷம் ஏறி அந்த நாயும் உயிர் இழந்தது.

வீட்டின் அருகே தனது செல்ல நாய், பாம்புகளுடன் இறந்து கிடப்பதைக் கண்ட திபாகர் ரய்தா, நடந்ததை புரிந்து கொண்டு கண்ணீர் வடித்தார். அவரது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் இருந்துள்ளனர். ஒருவேளை அந்த பாம்புகள் வீட்டிற்குள் புகுந்திருந்தால் அனைவரும் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அவரின் பாசமுள்ள நாய் அவர்களை அனைவரையும் காப்பற்றி விட்டு தனது உயிரிழையும் இழந்துள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு, கிராம மக்கள் 100 பேருக்கும் மேல் அங்கு கூடி, அந்த நாயின் நன்றியையும், விசுவாசத்தையும் பற்றி சிலாகித்து பேசினர். அதன்பின், அந்த நாயை மலர்கள் தூவி, மரியாதையுடம் அடக்கம் செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.