மங்களகிரி நாட்டில் வேணு என்ற வைத்தியர் வாழ்ந்து வந்தார். அவரது வைத்தியத்தால், எல்லா நோய்களும் பறந்து விடும் என்ற காரணத்தால், மங்களகிரி நாட்டு மக்கள் மட்டும் அல்லாது அண்டை நாடான தவளகிரி மக்களும், அவரிடம் வைத்தியம் செய்துக் கொண்டு வந்தனர்.
மங்களகிரியின் மீது ஒருமுறை பக்கத்து நாட்டு மன்னன் படை எடுத்து வந்து, மங்களகிரி மன்னனிடம் தோற்று ஓடிப் போனான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கவில்லை.
ஒருநாள் மங்களகிரி மன்னன் தன் நாட்டிலுள்ள வைத்தியர் வேணுவுக்கு, ""நீங்கள் நம் எதிரியான அண்டை நாட்டின் மக்களுக்கு வைத்தியம் செய்கிறீர்கள். இது மாபெரும் குற்றம். இப்படிச் செய்வதை நீங்கள் நிறுத்தா விட்டால், உங்களை கடுமையாகத் தண்டிப்பேன்,'' எனத் தன் வீரர்கள் வாயிலாகக் தெரிவித்தான்.
ஆனால், வேணு எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், எப்போதும் போல எல்லாருக்கும் வைத்தியம் செய்து வந்தார்.
ஒருமாத காலத்திற்குப் பின், மங்களகிரி மன்னன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். வேணுவின் நினைவு அப்போது அவனுக்கு வந்தது.
அப்போது வேணுவின் சீடர்கள் வந்து மன்னனை வணங்கவே அவன் கோபமாய், ""உங்கள் குரு என் எதிரிக்கும் உதவுபவர். அதனால் அவர் என் எதிரி. அவரைப் பிடித்து இழுத்து வர என் வீரர்களை அனுப்புகிறேன். அவரைக் கடுமையாக தண்டிக்கவேண்டும்,'' எனக் கூறித் தன் வீரர்களிடம் வேணுவைப் பிடித்து, வரும்படிக் கட்டளை இட்டுவிட்டுத் தன் தேரில் சென்றான்.
கொஞ்ச தூரம் போனதும், அவனது ரதத்தின் சக்கரம் கழன்று தனியாகப் போனது. அதனால் அந்த ரதம் கவிழ, அதிலிருந்து மன்னன் கீழே விழுந்தான். அவனது முழங்கால்களிலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டு மயங்கி விழுந்தான்.
அதைக் கண்ட வேணு, ""மன்னரைக் குதிரை மீது ஏற்றி என் குடிசைக்கு அழைத்துச் செல்வோம். அவரது காயங்களுக்கு மருந்து போடலாம்,'' என்றார்.
வீரர்களும் அவ்வாறே செய்தனர்.
வேணு, மன்னரது காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டி, சீடர்கள் அவனை கவனித்துக் கொள்ளும்படிக் கூறிவிட்டு உள்ளே சென்றார்.
மயக்கம் தெளிந்த மன்னன் சுற்றிலும் பார்த்தபோது வேணுவின் சீடன் அவனிடம், ""அரசே! நீங்கள் எங்கள் குருவை எதிரியாக கூறி தண்டிக்க நினைத்தீர்கள். ஆனால், அவர் உங்களைத் தம் எதிரி என்று பாராமல் உங்கள் காயங்களுக்கு மருந்து போட்டார். வைத்தியனின் கடமை நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதே. அவர்கள் நண்பனா, எதிரியா என்றெல்லாம் பார்க்கக் கூடாது,'' என்றான்.
மன்னனுக்கு அப்போது அச்சீடன் சொன்னதில் உள்ள உண்மை புரிந்தது. அப்போது உள்ளே இருந்து வந்து கொண்டிருந்த வேணுவை அவன் வணங்கி, ""இனி நீங்கள் இரு நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யுங்கள். இதற்கு நானும் உதவுகிறேன்,'' என்று கூறி ஒரு ரத்தின மாலையை எடுத்த அவருக்குப் பரிசாக அளித்து விட்டுத் தலைநகருக்குச் சென்றான்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.