Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

சாலை விபத்தில் உயிர் போகாத உடல் வேண்டுமா? – வீடியோ


”என்னைப் போன்ற உடல்வாகு உங்களிடம் இல்லை, கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள்” என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் மனிதனை உருவாக்கி உள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதிக்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல நகரங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ள இந்த மனிதன் கூறும் அறிவுரை என்ன தெரியுமா?

’என்னைப் போன்ற உடல்வாகு உங்களிடம் இல்லை, கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் - என்னைப் போன்ற உடலமைப்பு உங்களுக்கு தேவைப்படாது’ என்பதே இவரது சாலை விழிப்புணர்வுக்கான தாரக மந்திரமாக உள்ளது.

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் சாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால் அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? என்பதை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெல்போர்ன் நகரை சேர்ந்த பிரபல ஓவியர் பாட்ரிசியா பிக்கினினி-யின் கற்பனையில் பிரபல அறுவை சிகிச்சை நிபுணரால் ‘பைபர் கிளாஸ்’ உலோகத்தால் செய்யப்பட்டுள்ள இந்த மனித உடலானது, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எவ்வித ஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்டேட் லைப்ரரி ஆப் விக்டோரியாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ‘கிரஹம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘மாதிரி மனிதர்’ தற்போது காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மனிதனின் உடல்வாகை பார்க்க....


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.